அனுர குமார திசாநாயகவினதும்
குடும்பத்தினரினதும்
வறுமை வாழ்க்கை

2019.10.08 ஆம் திகதி தனது சொந்த ஊரான தம்புத்தேகமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக ஆற்றிய உரையில் இருந்து




 நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்டு குடிவந்தோம்.
எனது தந்தை நில அளவை ஊழியர். அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது. இரவு நேரம் படிப்பதற்காக தபால் கந்தோருக்கு வருவோம். மின் விளக்கொளியில் படிப்பதற்கு இருந்த இடம், இந்த தபால் கத்தோர்தான்.
விடுமுறை நாட்களில் புகையிரதத்தில் விளாம்பழம் விற்போம். எனது அக்காவும் அம்மாவும் இந்த கூட்டத்துக்கு வந்திருக்குறாங்க. அக்காவின் கையில் தீக் காயத்தின் தழும்பு இருக்கும். அது கூலிக்கு பனியாரம் சமைக்கும்போது ஏற்பட்ட தீக் காயம்.
அன்று தம்புத்தேகம வைத்தியசாலையின் வைத்தியர் ஒரு தமிழ் ஐயா. எனது தந்தை வேலை செய்த நில அளவை அலுவலகத்தின் பிரதானி ஒரு தமிழ் ஐயா. தம்புத்தேகம புகையிரத நிலைய அதிகாரியும் ஒரு தமிழ் ஐயா. நாங்கள் அவர்களோடு நெருக்கமாக வாழ்ந்தோம். ஆனால் ஆட்சியாளர்கள் எங்களுக்கிடையில் ஒரு யுத்தத்தைச் சுமத்தி அவை அனைத்தையும் இல்லாமலாக்கினார்கள். எங்களோடு நெருக்கமாக வாழ்ந்த பலரை நாங்கள் இழந்திருக்கின்றோம். அந்த வேதனையையும் வலியையும் நாங்கள் அறிவோம்.
ஏழ்மையின் வெறுமையை நன்கு அறிந்தவர்கள் நாங்கள். குடியிருக்க உருப்படியான வீடு இல்லையென்றால், பிள்ளைகளுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லையென்றால், ஒழுங்கான சுகாதார சேவை இல்லையென்றால், மனதுக்கு ஓய்வு இல்லையென்றால், அந்த இடத்தில் நாம் வாழத்தான் வேண்டுமா?
கடந்த 71 வருடங்களாக, எனது பெற்றாரும்தான், பிழையான அரசியலொன்றை தெரிவுசெய்திருந்தார்கள். ஆயிரம் எதிர்பார்ப்புக்களுடன் ஓர் அரசியல் கட்சிக்கு அவர்கள் வாக்களித்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் எதனையும் அவர்களால் நிறைவுசெய்துகொள்ள முடியாமல் போய்விட்டது.
நாம் உங்கள் மக்கள். மக்களின் பிரதிநிதிகள். இனியும் நீங்கள் எங்களைப் புறக்கணிப்பது நியாயமாகாது. அந்த வெற்றிடங்களை நிறைவுசெய்யும் நோக்கோடு உங்களுக்காக, இந்த நாட்டுக்காக, நாட்டின் எதிர்காலத்துக்காக ஜனாதிபதி தேர்தலுக்கு வந்திருக்கின்றோம்.
71 வருடங்களாக கிடைக்காத சந்தோஷத்தையும் நிம்மதியையும் பெற்றுக்கொள்ளும் பாதையொன்றை திறந்து தருவோம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top