ஜனாதிபதி தேர்தல் தொடர்பான
வர்த்தமானி அறிவித்தலை
இரத்து செய்ய கோரும் மனு தள்ளுபடி
உயர்நீதிமன்றத்தை கேலிக்கு உட்படுத்த வேண்டாம்
மனுதாரரின் சட்டத்தரணிக்கு
கடுமையான எச்சரிக்கை.
ஜனாதிபதி
தேர்தலை நடத்துவதற்காக
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட
வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு
கோரி உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது.
முன்னாள்
காலி மேயர்
மெத்சிறி டி
சில்வா குறித்த
மனுவை நேற்று
(03) தாக்கல் செய்திருந்தார்.
இந்த
மனு இன்று
(04) விஜித் மலல்கொட, பிரீதி பத்மன் சூரசேன
மற்றும் காமனி
அமரசேகர ஆகிய
மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது,
இந்த விடயம்
தொடர்பில் புதிய
மனுவொன்றை சமர்ப்பிப்பதற்காக,
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள
மனுவினை வாபஸ்
பெறு அனுமதிக்குமாறு
மனுதாரர் சார்பில்
முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார.
இதன்போது,
மூவரடங்கிய நீதிபதி குழாமின் தலைவர் விஜித்
மலல்கொட, உயர்நீதிமன்றத்தை
கேலிக்கு உட்படுத்த வேண்டாம் என மனுதாரரின்
சட்டத்தரணிக்கு கடுமையாக எச்சரித்தார்.
நீதிமன்றத்தின்
முன்னிலையில் பொறுப்பற்ற வகையில் மேற்கொள்ளும் இவ்வாறான
நகைப்பிற்குரிய செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது
என நீதிபதி
மலல்கொட வலியுறுத்தினார்.
இந்த
மனு நேற்று
மாலை தாக்கல்
செய்யப்பட்டு விடங்களை உறுதிப்படுத்துவதாக
இன்றைய தினம்
(04) நீதிமன்றில் அழைக்கப்பட்டுள்ள போது இவ்வாறான கோரிக்கை
ஒன்றை முன்வைப்பது
பிரச்சினைக்குரியது என தெரிவித்த
நீதிபதி, இவ்வாறான
செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
எவ்வாறாயினும்,
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் மனுவை
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்வது
என தீர்மானித்தது.
இந்த
மனுவின் பிரதிவாதிகளாக
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,
அதன் உறுப்பினர்கள்
மற்றும் சட்டமா
அதிபர் ஆகியோர்
பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment