யாழ்ப்பாணம் சர்வதேச
விமான நிலையத்துக்கு
வருகைதந்த முதல் பயணி
இலங்கையின்
மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் அனைத்துலக
விமான நிலையம்
கடந்த 17ஆம் திகதி சிறிலங்கா அதிபர் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்
ரணில்விக்ரமசிங்க ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.
இதையடுத்து,
அன்று காலை
10.14 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், சென்னையில்
இருந்து வந்த
எயர் இந்தியாவின்
துணை நிறுவனமான
அலையன்ஸ் எயர்
நிறுவனத்தின் ATR 72 – 600 விமானம் முதன்
முதலாக தரையிறங்கியது.
இந்த
விமானத்தில், எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர்
அஷ்வனி லொஹானி
உள்ளிட்ட விருந்தினர்கள்
பலரும் யாழ்ப்பாணம்
வந்தனர்.
யாழ்ப்பாணம்
சர்வதேச விமான நிலையம் திறந்து
வைக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டில் இருந்து வந்த
முதலாவது பயணியாக,
எயர் இந்தியா
நிறுவனத்தின் தலைவர் அஷ்வனி லொஹானி குடிவரவு
அதிகாரிகளிடம் தனது கடவுச்சீட்டை கொடுத்து பதிவு
செய்து கொண்டார்.
அத்துடன்
அவரே பலாலி
விமான நிலையத்தின்
சுங்க அதிகாரிகளின்
சோதனையையும் முதலாவதாக எதிர்கொண்டிருந்தார்.
0 comments:
Post a Comment