குண்டை வெடிக்கவைத்த தற்கொலை பயங்கரவாதி
சஹ்ரானுடன் அமைச்சர் ஹக்கீமுக்கு தொடர்பா?
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி
சிங்கள ஊடகம் காணொளி ஒன்றை
வெளியிட்டுள்ளது
குண்டை வெடிக்கவைத்த தற்கொலை பயங்கரவாதி சஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையாடும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்றை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றினால் இந்த காணொளி பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீமை கைது செய்யுமாறு கோரி நேற்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றையும் குறித்த அமைப்பினர் நடத்தியுள்ளனர்.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு, காத்தான்குடி அலுவலகத்தில் அதன் தலைவர் சஹ்ரான் ஹசீம் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் கலந்துரையாடல் உள்ளடக்கப்பட்ட காணொளியை பொலிஸ் தலைமையகத்தில் சமர்ப்பித்து உடனடியாக அவரை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததன் தொடர்ந்து மாளிகாவத்தையிலுள்ள மொஹமட் மிப்லால் மௌலவி வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை பொலிஸார் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை இலக்கு வைத்து மாற்று தரப்பினரால் இவ்வாறான தகவல்கள் திட்டமிட்டு பரப்புவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
0 comments:
Post a Comment