முஸ்லிம் சமூகம் நஷ்டத்திலும் துன்பத்திலும்
அவதியுற்றிருக்கும் நிலையில்,
எமது கழுத்துக்கள் மாலைகளை வாங்குமா?
கைகளை உயர்த்தி ஆர்ப்பரிப்பு செய்யுமா?
பூரிப்பு ஏற்படுமா?
முஸ்லிம் சமூகம் நஷ்டத்திலும் துன்பத்திலும் அவதியுற்றிருக்கும்
இந்தக் காலத்தில் கவலையுடன் சிந்தித்து செயல்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் ரோசமுள்ள
ஈமான் கொண்ட மனிதர்களாகிய எமக்கு பூரிப்பு ஏற்படுமா? எமது கழுத்துக்கள் மாலைகளைத்தான் வாங்குமா? கைகளை உயர்த்தி ஆர்ப்பரிப்புத்தான் செய்வோமா?
உதாரணத்திற்கு அநுராதபுர மாவட்டத்தில் ஹொரவப்பொத்தனை
பகுதியில் 10 பேர் அநியாயமாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த சில மாதங்களாக சிறையில்
இருந்து கொண்டிருக்கிறார்களே! அவர்களின் குடும்பங்கள் படாதபாடுகள்
பட்டுக்கொண்டிருக்கின்றனவே இது குறித்து சிந்தித்தோமா?
தேர்தல் வந்தால் மாத்திரம் கட்சியின் ஸ்தாபத் தலைவர் மர்ஹும்
எம்.எச்.எம் அஷ்ரஃபின் பெயரையும் கொள்கையையும் மக்கள் மத்தியில் நினைவுக்கு
கொண்டுவரும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தேர்தல் முடிந்ததும் அஷ்ரஃப்பையும் மறந்து வாக்களித்த
மக்களுக்கும் இவர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படும்போது அதனைத்
தெரிந்து கொள்ளாது செயல்படுவது சிந்திக்கும் மக்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த அம்பாறை,
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் முஸ்லிம் மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்
பிறகு எத்தனையோ கஷ்டத்தையும் துன்பங்களையும் அனுபவித்தார்கள் அல்லவா?.
அந்தக் கஸ்ட காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்து
மக்களோடு மக்களாக இருந்து உதவாமல் ஏழு மாதங்களுக்கு பின்னர் கிழக்கு மாணத்திற்கு
வாக்குத் தேட முஸ்லிம் மக்களைச் சந்திக்க விஜயம் செய்துள்ளார் அமைச்சர் ரவூப்
ஹக்கீம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பல
பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்தார்கள் முஸ்லிம்
காங்கிரஸின் கோட்டை என கூறப்படும் கல்முனையில் குறிப்பாக சாய்ந்தமருதில் இடம்பெற்ற
தற்கொலைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் பல்வேறு நெருக்கடிகளை இங்குள்ள
மக்கள் சந்தித்தனர். இந்த இடத்திற்கு கூட அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரடியாக
வருகை தந்து மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவில்லை.
இது மாத்திமல்ல, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான
சர்ச்சை வெடித்த போது கூட அவரது கட்சிக்காக வாக்குகளை அள்ளி, அள்ளி வழங்கும்
கல்முனை முஸ்லிம்களை நேரடியாக சந்திக்க வருகை தந்து இந்தப் பிரச்சினைகளுக்கு
சரியான முறையில் முகம் கொடுக்கவில்லை.
சமூகம் நஷ்டத்திலும் துன்பத்திலும் இருக்கும் போது
திரும்பிப்பார்க்காத அமைச்சர் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியின் கொந்தராத்தை
நிறைவேற்றும் நோக்கில் கிழக்கு மாகணத்தை நோக்கி படையெடுத்திருப்பது வேதனையாகும் என
மக்கள் தெரிவிக்கின்றனர்..
இதேவேளை, அம்பாறை மாவட்ட்த்தில்,
ஒலுவில் பிரதேசத்தில்_கடலரிப்பு
அம்பாறைப் பிரதேச மீனவர்களின் தொழிலில் ஏற்பட்டுள்ள சிக்கல்
மாயக்கல்லி விவகாரம்
பொத்துவில் பிரதேசத்திற்கு தனியான கல்வி வலையம்.
வட்டமடு காணிப் பிரச்சினை
நுரைச்சோலை வீட்டுத் திட்டம்
ஆலிம்சேனை காணிப்பிரச்சினை
கல்முனை, சம்மாந்துறை புதிய நகர அபிவிருத்தி
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை
சம்மாந்துறை விவசாயிகளின் காணிப்பிரச்சினை
கல்முனையில் “தேசிய ரீதியில் மின்னொளியில் விளையாடக்கூடிய வசதியுள்ள
விளையாட்டு மைதானம் ...
இதேபோல் இன்னும், இன்னும், இன்னும்.............. வாக்குறுதிகள்!
19 வருட கால முஸ்லிம் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற அமைச்சரவை
அந்தஸ்துள்ள அமைச்சு அதிகாரங்களைக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கான இப்படியான
பிரச்சினைகள் இதுவரை முறையாகத் தீர்க்கப்படாவில்லை.
1.
இப்படியான நிலையில் ரோசமுள்ள மனிதர்களாகிய எமக்கு பூரிப்பு ஏற்படுமா?
2.
எமது கழுத்து மாலைகளை வாங்குமா?
3.
கைகளை உயர்த்தி ஆர்ப்பரிப்புத்தான் செய்யுமா?
0 comments:
Post a Comment