மஹிந்தவைச் சந்தித்துள்ள
சாய்ந்தமருது பள்ளிவாசல் தரப்பினர்
மக்களின் கருத்துக்கள்……..

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜ்பக்ஸவைச் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் கல்முனை மாநகர சபை (தோடம்பழ சுயேட்சை) உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர் அல்லவா?
இது குறித்து மக்களின் கருத்து,

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை 100% முக்கியம். ஆனாலும் நாம் முதலில் முஸ்லிம்கள்.பின்னரே சாய்ந்தமருது மக்கள்.
எனவே ஜனாதிபதி தேர்தலில் நாம் மிகவும் முக்கியமாகக் கருத்திற் கொள்ள வேண்டியது,நமது மதம் மற்றும் வெளி மாகாணங்களில் உள்ள எமது சமுதாய முஸ்லிம் உடன் பிறப்புக்கள்பற்றியே.

தனிப்பட்ட கோபம்,தாபம் பாராட்ட இது உகந்த தருணமல்ல.எனவே எமது சமயம், சமுதாயம் பற்றி மட்டும் கவனத்திற் கொண்டு வாக்கு அளியுங்கள்.வெளி மாகாண அப்பாவி உடன்பிறப்புகளின் பதுவா எமக்கு வேண்டவே வேண்டாம்.
இனவாதம் குறைவு என நீங்கள் கருதும் வெற்றி பெறக்கூடிய கட்சிக்கு வாக்கு அளியுங்கள்..மாற்றம் என்பது பெரும்பான்மை சமுதாயத்திலிருந்தே வர வேண்டும்.பாராளுமன்ற தேர்தலில் அது பற்றி சிந்திக்கலாம். வாக்குகளை வீணடிக்க வேண்டாம் .
இன்ஷாஅல்லாஹ்..

பள்ளிவாசல் தலைமை நிர்வாகம் தோடம்பழ உறுப்பினர்கள் இன்னும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்ற முடியாது சபை எனும் பயணம் தடம் புரன்டு பணம் பதவி என்ற பயணத்தில் பயணிக்கும் இவர்களின் பின்னால் இன்னும் மக்கள் பயணிக்க தயார் இல்லை என்பது மிக விரைவில் மக்கள் தெளிவு படுத்துவார்கள் எதிர் பாருங்கள் மக்கள் என்னம் எது என்பது மிக விரைவில்

சபையை விட சமூகம் பெரிது.

இப்படி பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top