ஊடகங்களிடம் எதுவும் பேசாமல்
ஒதுங்கியிருக்குமாறு
கோத்தாவுக்கு ஆலோசனை
டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு
ஊடகங்களிடம்
எதுவும் பேசாமல்
ஒதுங்கியிருக்குமாறு சிறிலங்கா பொதுஜன
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய
ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக, அவரது இணைப்
பேச்சாளர்களில் ஒருவரான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொழும்பில்
இன்று செய்தியாளர்களைச்
சந்தித்த டலஸ்
அழகப்பெருமவிடம், கோத்தாபய ராஜபக்ச ஊடகங்களைச் சந்திக்காமல்-
செய்தியாளர் சந்திப்புகளை நடத்தாமல் தவிர்ப்பது ஏன்
என்று எழுப்பப்பட்ட
கேள்விக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சட்ட
ஆலோசனைகளின் அடிப்படையிலேயே கோத்தாபய ராஜபக்ச ஊடகங்களைத்
தவிர்த்து வருகிறார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக
அவருக்கு அழுத்தம்
கொடுக்கும் வகையில் பல வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன.
இந்த
நிலையில், ஊடகங்களிடம்
இருந்து விலகியிருக்குமாறு,
கோத்தாபய ராஜபக்சவுக்கு,
சட்டவாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கோத்தாபய
ராஜபக்ச ஊடகங்களுக்கு
நெருக்கமான ஒருவர்.ஆனால் நீதிமன்ற வழக்குகளால்
அவர் ஊடகங்களில்
இருந்து விலகியிருக்க
வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment