கோத்தா ஜனாதிபதி தேர்தலில்
வெற்றி பெற்றால்,
வழக்குத் தொடர முடியாத விலக்குரிமை
டி.ஏ. ராஜபக்ஸ நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டத்தில் அரசாங்க சொத்துக்கள் விரயம் செய்யப்பட்டதாக, கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, சிறப்பு மேல்நீதிமன்றம் டிசெம்பர் 10ஆம் திகதி வரை விசாரணை செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒக்டோபர் 14ஆம் திகதி தொடக்கம் இந்த வழக்கை சிறப்பு மேல் நீதிமன்றம் விசாரிக்கவிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினால், கோத்தாபய ராஜபக்ஸ நீதிமன்ற விசாரணைகளில் கவனம் செலுத்தாமல், பரப்புரைகளில் தீவிர கவனத்தை செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸ வெற்றி பெற்றால், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாத விலக்குரிமை கிடைத்து விடும் என்பதால், இந்த வழக்கு விசாரிக்கப்பட முடியாத நிலை ஏற்படும்.
0 comments:
Post a Comment