யார் துரோகி!
ஏழு மாயார் துரோகி!
தங்களின் பின்னர்
ஏழு மாயார் துரோகி!
தங்களின் பின்னர்
கிழக்கு மாகாணத்திற்கு
விஜயம் செய்துள்ள
ஹக்கீம்
கல்முனையில் பிரதேச செயலகம் தொடர்பான
சர்ச்சை வெடித்த போது கூட அவரது கட்சிக்காக
வாக்குகளை அள்ளி வழங்கும்
கல்முனை முஸ்லிம்களை நேரடியாக
சந்திக்க
செல்லவில்லை.
ஏழு மாதங்களுக்கு பின்னர்
அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ஹக்கீம் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை தூரோகியாக விமர்சிப்பது வேடிக்கையான விடயம் என காத்தான்குடி
நகர சபை தலைவர் அஸ்வர் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும்
குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 21 ம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் பின்னர்
காத்தான்குடி முஸ்லிம் சமூகம் கடும் நெருக்கடிகளை சந்தித்த போது திரும்பிக்கூட
பார்க்காத அமைச்சர் ஹக்கீம் தேர்தலை
இலக்கு வைத்து காத்தான்குடிக்கு நேற்றைய தினம் விஜயம் செய்தமையானது சமூகம் தொடர்பான அவரது பற்று தொடர்பில் எமக்கு
தெளிபடுத்துகிறது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பல
பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்தமை நாம்
அறிந்ததே.முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என கூறபடும் கல்முனை தொகுதியில் கூட
சாய்ந்தமருது சம்பவத்தின் பின்னர் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தமை நாம் அறிந்ததே , அங்கு கூட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நேரடியாக
சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சர்ச்சை வெடித்த
போது கூட அவரது கட்சிக்காக வாக்குகளை அள்ளி வழங்கும் கல்முனை முஸ்லிம்களை நேரடியாக
சந்திக்க செல்லவில்லை.
சமூகம் நஷ்டத்தில் இருக்கும் போது திரும்பிப்பார்க்காத
அமைச்சர் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியின் கொந்தராத்தை நிறைவேற்றும் நோக்கில்
கிழக்கு மாகணத்தை நோக்கி படையெடுத்து அங்கு ஹிஸ்புல்லாஹ் அவர்களை தூரோகியை போல
சித்தரித்து திரிவது வெட்கக்கேடான விடயமாகும்.
ஹிஸ்புல்லாஹ் என்பவர் யார் ? ஹக்கீம் என்பவர் யார் ? என்பதை காத்தன்குடி முஸ்லிம் சமூகமும் இலங்கை முஸ்லிம் சமூகமும் நன்கு அறிந்து
வைத்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment