ராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில்
சிரித்து மகிழ்ந்த உறவினர்கள்
  
ராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் உறவினர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தின் லீனெஸ்டர் மாகாணத்தில் உள்ள கில்கென்னி நகரை சேர்ந்தவர் ஷே பிராட்லி. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவர் கடந்த 12-ந் திகதி உடல்நல குறைவால் இறந்தார்.

 இவர் இறப்பதற்கு முன்பாக தன் கடைசி ஆசையாக, தனது உடலை அடக்கம் செய்யும்போது, உறவினர்கள் யாரும் அழக்கூடாது என்றும், மாறாக வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதை சொன்னதோடு மட்டும் இல்லாமல் தனது இறுதிச்சடங்கில் உறவினர்களை சிரிக்கவைப்பதற்கான ஏற்பாட்டையும் அவர் செய்திருந்தார். அதன்படி ஷே பிராட்லி இறப்பதற்கு முன்பு தனது குரலில் ஆடியோ ஒன்றை பதிவு செய்து, தனது மகள் ஆன்டிரியாவிடம் கொடுத்திருந்தார்.

ஷே பிராட்லியின் இறுதிச்சடங்கின் போது, அவரது சவக்குழிக்கு அருகில் ஒலிப்பெருக்கி மூலம் அந்த ஆடியோவை ஆன்டிரியா ஒலி பரப்பினார். அதில், “நான் எங்கே இருக்கிறேன்? இது மிகவும் இருட்டாக இருக்கிறது. என்னை வெளியே விடுங்கள்என ஷே பிராட்லி பேசியிருந்தார்.

இதை கேட்டு அங்கு கூடியிருந்த ஷே பிராட்லியின் உறவினர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top