கோத்தபாயவின் இரட்டை குடியுரிமை
பெயர் குறிப்பிடப்பட்டுள்ள
இலக்கம் பொருந்த வில்லையாம்
ஆவணம் போலியானதாம்

2005ஆம் ஆண்டுக்கான இரட்டை குடியுரிமை ஆவணத்தில் நந்தசேன கோத்தபாய ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கம் பொருந்த வில்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை தொடர்பான கணனி ஆவணத்தில் 15305 என்ற இலக்கத்தில் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இரட்டை குடியுரிமை சம்பந்தமான உத்தியோகபூர்வ அச்சு ஆவணங்களில் அந்த இலக்கத்தின் கீழ் வேறு ஒருவரின் பெயர் இருப்பது தெரியவந்துள்ளது.

போலி ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அல்லது சட்டவிரோதமாக ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளமை தெளிவாக தெரிவதாக சட்டவாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ச இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்தமைக்கான ஆவணங்கள் எதுவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இல்லை என தெரியவருகிறது.

போலியான தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் சட்டவிரோதமாக வாக்காளராக பதிந்தமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top