கானா நாட்டில் பெட்ரோல் நிலையத்தில் பாரிய தீ
150 பேர் உடல் கருகி பலி
கானா நாட்டில் பெட்ரோல் நிலையத்தில் பாரிய தீ ஏற்பட்டு 150 பேர்
உடல் கருகி பலியானார்கள் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கானா
நாட்டில் 3 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இத்துக்ககரமான சம்பவம்பற்றி தெரியவருவதாவது:-
மேற்கு ஆப்பிரிக்காவில் கானா நாடு உள்ளது. இதன் தலைநகரம் அக்ராவில் நகரின் மையப் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. அப்போது அங்கு பலத்த மழை கொட்டியது.
இதனால் வீதியில் முழங்கால் அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே, அங்கு ஏராளமான பொதுமக்கள் மழைக்கு ஒதுங்கி இருந்தனர். அப்போது அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மளமள வென பரவியது. அந்த தீ அக்கம் பக்கத்தில் சுற்றியிருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், பொலிஸாரும் அங்கு விரைந்தனர்.
மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த தீ விபத்தில் சிக்கி 150 பேர் பலியாகினர். பலரது உடல்கள் அடையாளம் தெரியாத வகையில் கரிக்கட்டைகளாக மீட்கப்பட்டது.
இவர்கள் தவிர மேலும் பலர் மழை வெள்ளத்தில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பல மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின. பெட்ரோல் போடுவதற்கு ஒரு பஸ் பயணிகளுடன் அங்கு வந்து நின்றது. அந்த பஸ் தீயில் சிக்கியதால் பயணிகள் அனைவரும் எரிந்து பலியாகினர்.
இச்சம்பவத்துக்கு கானா அதிபர் ஜான் டிராமன் மகாமா அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். அதில் பலர் தங்களது உயிரை இழந்துள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை’’ என கூறியுள்ளார்.
விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கானா நாட்டில் 3 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment