ஜனாதிபதி மற்றும் பான் கி மூனுக்கும் இடையில்
விசேட
தொலைபேசி உரையாடல்
நாட்டு
மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து
தமது மக்களுக்கிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை
அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் பொது
செயலாளர் பான் கி மூன்
பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று 4ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட தொலைபேசி அழைப்பின்
ஊடாக தொடர்பு கொண்டவேளையில், பொது
செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
19வது
அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பிலும்
தமது பாராட்டுக்களை தெரிவித்த பொது செயலாளர் பேன்
கீ மூன் அதற்காக ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களையும்
பாராட்டினார்.
நாட்டில்
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி புதிய அரசியல் கலாசாரத்தை
தோற்றுவிக்கும் வகையில் 20வது அரசியல் யாப்பு
சீர்திருத்தத்தை துரிதகதியில் அங்கீகரிப்பதை காண்பது தமது எதிர்பார்ப்பு
என்றும் பொது செயலாளர் தொலைபேசி உரையாடலின்போது
கூறினார்.
20வது
அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் ஊடாக
நாட்டில் புதிய தேர்தல் முறையினை
உருவாக்கி சிறந்த அரசியல் கலாசாரத்தை
தோற்றுவிப்பது தமது எதிர்பார்ப்பு என்றும்
இதற்காக உயர்ந்தபட்ச
அர்ப்பணிப்புக்களை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் நியூயோர்க்கில் நடைபெறும்
ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில்
கலந்துகொள்ள எதிர்பார்ப்பதாகக் கூறிய ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன நாட்டின் புதிய ஆட்சியினை ஸ்தாபித்ததன்
பின்னர் இதில் பங்கேற்க தமக்கு
முடியும் என்றும் நம்பிக்கை வைத்துள்ளதாக
கூறினார்.
0 comments:
Post a Comment