எமது மண்ணின் சாதனையாளர்கள் – 2015
விருதுக்கான விண்ணப்பம் கோரல்.
வங்கக்கடலின்
ஆர்ப்பரிப்பின் மத்தியில் கம்பீரமாக தென்கிழக்கின் முக
வெற்றிலையாய் காட்சியளிக்கும் எமது கல்முனை பிரதேசத்தை
தனித்துவப்படுத்தி, முன்மாதிரியான பிரதேசமாகக்
கட்டியெழுப்ப வேண்டுமேயானால் முறையான கல்வியை நமது
சந்ததிகளுக்கு வழங்க வேண்டும். கல்வியின் அவசியம்
பற்றியும், கல்வியின் சிறப்புக்கள் பற்றியும், கல்வியென்பது
அற்றுப் போகும்போது
ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் அவர்களுக்குத் தெளிவுகளை
ஏற்படுத்தி கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.
அதுமாத்திரமல்ல கற்றுக் கொண்டிருக்கின்றவர்களை ஊக்குவிப்பதற்காகவும்,
உற்சாகப்படுத்துவதற்காகவும் கல்வியிலே சாதனை
படைத்து நமது
மண்ணைக் கௌரவப்படுத்தியவர்களைப்
பாராட்டி கௌரவிக்க
வேண்டும்.
அந்த
வகையில் தரம்
5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைகளில் மிகச்
சிறந்த பெறுபேறுகளைப்
பெற்று எமது
மண்ணிற்கு பெருமை
சேர்த்த மாணவர்களை
கௌரவிக்கும் உயரிய நோக்கில் கல்முனை தீனஃத்
பவுண்டேஷனினால் வருடந்தோறும் 'எமது மண்ணின் சாதனையாளர்கள்'
மாணவர் பாராட்டு
விழா நடைபெற்று
வருகின்றது.
கடந்த
வருடம் எமது
மண்ணின் சாதனையாளர்கள்
- 2014 பாராட்டு விழாவில் கல்முனை பிராந்தியத்தில் அதி
சிறந்த பெறுபேறுகளைப்
பெற்று எமது
மண்ணிற்கு பெருமையீட்டித்
தந்த 84 சாதனையாளர்கள்
2014ம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம்
2ம் திகதி
கமு/கமு/அல்-பஹ்ரியா
மகா வித்தியாலயத்தில்
பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
அதன்
நீட்சியாக இரண்டாம்
வருடமாக இந்த
ஆண்டும் மேற்படி
விழாவை சிறப்பாக
நடாத்த கல்முனை
தீனஃத் பவுண்டேஷன்
தீர்மானித்துள்ளது. ஆக கீழ்
குறிப்பிடப்பட்டுள்ள சாதனையாளர்கள் தெரிவுமுறை
சம்பந்தமான அறிவுறுத்தல்களுக்கு அமைவாக
தகுதிபெற்ற மாணவர்கள் கீழே சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தபால் முகவரியூடாகவும் அல்லது
இணையதள முக
முகவரியூடாகவும் எதிர்வரும் 15-06-2015 ஆம் திகதிக்கு முன்னதாக
எமக்கு கிடைக்கக்கூடியவாறு
விண்ணப்பிக்க முடியும்.
எமது
மண்ணின் சாதனையாளர்கள்-2015
மாணவர் தெரிவுமுறை
சம்பந்தமான அறிவுறுத்தல்கள்:
எமது
மண்ணின் சாதனையாளராக
தெரிவுசெய்யப்படும் மாணவன்/மாணவி
கல்முனைப் பிரதேசத்தை
பிறப்பிடமாக கொண்டிருப்பதுடன், பின்வரும்
தகைமைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி:
2013ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்
அங்கீகரிக்கப்பட்ட அரச பல்கலைக்கழகம்
ஒன்றில் 2013/2014ம் கல்வியாண்டிற்கென (உள்வாரி மாணவன்/மாணவியாக) தெரிவு
செய்யப்பட்டிருத்தல் வேண்டும் அல்லது
குறித்த ஆண்டில்
அரசினால் வழங்கப்படும்
புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினைப் பெற்று வெளிநாட்டுப்
பல்கலைக்கழகம் ஒன்றிற்கு தெரிவுசெய்யப்பட்டிருத்தல்
வேண்டும்.
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான அனுமதி:
2012ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றி
குறித்த கல்வியாண்டிற்காக
தேசிய கல்வியியற்
கல்லூரிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
(ஆங்கிலம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், உடற்கல்வி
உட்பட)
க.பொ.த (சா/த) அதி விசேட சித்தி:
2014ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றி
குறைந்தது ஐந்து
(05) பாடங்களில் அதி விசேட சித்திகளைப் ("A") பெற்றிருப்பதுடன் க.பொ.த (உ/த) பாடப்பிரிவு
ஒன்றில் கல்வியை
தொடர்வதற்கான பூரண தகுதியை பெற்றிருத்தல் வேண்டும்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:
2014ம் ஆண்டு நடைபெற்ற தரம்
5 புலமைப்பரிசில் பரீட்சையில் குறித்த மாவட்டத்திற்கென கல்விச்
செயலாளரினால் 2014/11/01ம் திகதி
வெளியிடப்பட்ட ED/01/12/12/10/05/-2014ம் இலக்க
கடிதத்திற்கமைய குறைந்த பட்ச வெட்டுப்புள்ளியை பூர்த்திசெய்திருத்தல் வேண்டும்.
2014ம் ஆண்டு நடைபெற்ற தரம்
5 புலமைப்பரிசில் பரீட்சை, 2014ம் ஆண்டு நடைபெற்ற
க.பொ.த (சா/த) பரீட்சை,
2013ம் ஆண்டு
நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் தோற்றி
பல்கலைக் கழகங்களுக்கு
தெரிவுசெய்யப்பட்ட, 2012ம் ஆண்டு
நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் தோற்றி
தேசிய கல்வியியற்
கல்லூரிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டு சாதனை படைத்த மாணவர்கள்
சம்பந்தமான தகவல்கள் பாடசாலை அதிபர்களூடாகவும், ஏனையவை விசேட தகவல் திரட்டல்
முறையான ஒன்லைன்
இணையதளம் மூலமும்
சேகரிக்கப்படுகின்றது.
வெளி
இடங்களில்/பாடசாலைகளில்
கல்வி கற்ற
எமது மண்ணின்
மாணவர்கள் விழாக்குழுவினரை
தொடர்புகொண்டு விண்ணப்பிக்க முடியும்.
THEENATH FOUNDATION,
145, Dr. Rizvi Road, Kalmunai.
Mobile: 0094752056122 | 0094756227226
E-Mail: theenath@yahoo.com | kalmunai@live.com
இணையதளத்தினூடாக
விண்ணப்பிக்க கீழே உள்ள குறியீட்டை அணுகவும்.
http://goo.gl/forms/k1hvSyxnXI
இவ்வண்ணம்,
விழா
ஏற்பாட்டுக்குழு,
தீனத்
பவுண்டேஷன் – கல்முனை.
0 comments:
Post a Comment