முதல் 10 குற்றவாளிகள் தேடல் பட்டியலில்

இந்திய பிரதமர் மோடியின் படம்

உலகின் மிகப்பெரிய இணையதளமான கூகுளில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் தேடல் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கூகுள் இணையதளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தேவையான எந்த தகவல்களையும் தேடலில் அறிந்து கொள்ள முடியும் என்பேத அதற்கு காரணம் ஆகும். கூகுளில்( world top 10 criminals ) உலகில் டாப் 10 கிரிமினல்கள் என்று தேடினால் அதில் நரேந்திர மோடியின் புகைப்படமும் வருகிறது.
முதல் வரிசையில் 3 இடங்களில் அவரது படம் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், ஹபிஸ் சையது, உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

கூகுளின் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியிருக்கிறது. கூகுள் மன்னிப்பு கோரினாலும் சற்று முன் வரை கிரிமினல்களின் பட்டியலில் அவர் புகைப்படம் நீக்கப்படாமல் அப்படியே இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top