கட்சித்தலைமைகள் யாரை விரும்புகின்றதோ

அவர்களைப் பட்டியலிட்டுமக்களிடம் வாக்களிக்குமாறு கேட்கப்படுவதே

கல்வித்தகைமையற்றவர்கள் எம்.பி ஆகுவதற்கு பிரதான காரணம்

இப்போதைய 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் சாதாரண தர பரீட்சை சித்தியடையாதவர்களாம்....
194 பேருக்கு உயர்தர தராதரம் கிடையாதாம். .......
இதில் வெட்கக்கேடு என்ன என்றால் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் தொழில் அற்றவர்களாக இருப்பதுதான்.
255 - 260 என்றவாறு அதிகரிக்கும்போது 94 , 150 த் தாண்டுமோ தெரியாது.ஆசனங்களை அதிகரிக்க போராடுவது போலவே , அவர்களின் கல்வித் தகுதியை அதிகரிக்கவும் போராடக்கூடாதா!?
 -  Rauf Hazeer

Rauf Hazeer சகோதரரே! நீங்கள் தெரிவித்திருக்கும் தகவலு்க்கு பிரதான காரணம் தற்போதய தேர்தல் முறையே என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது தற்போதய மாவட்ட தேர்தல் முறையில் மக்கள் விருப்பம் எதுவும் பெறாமல் அவருடைய கல்வித்தரம், குடும்ப பண்புகள், அவரின் கடந்தகால நடவடிக்கைக்ள் எத்வும் கவனியாது ரவுடித்தனம், பணம் என்பவற்றை கவனித்து வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்குவதன் மூலம் இப்படி கல்வித்தகைமைகள் அற்றவர்கள் ப்ணத்தை அள்ளி வீசி விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் புகுந்து விடுகின்றார்கள். பாருங்கள் அன்று தொகுதி ரீதியில் மக்கள் பிரதிந்திகள் தெரிவு செய்யப்பட்டபோது எப்படிப்பட்ட தகுதியுடையவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். மர்ஹும் நெய்னாமரைக்கார், ஏ.ஸி.எஸ்.ஹமீத் மூதுர் அப்துல் மஜீத்,எம்.எஸ்.காரியப்பர்,ஏ.ஆர்.மன்சூர். நிந்தவூர் எம்.எம் முஸ்தபா,சம்மாந்துைறை எம்.ஏ.அப்துல் மஜீத், எம்,ஸி.அஹமத், லத்தீப் சின்னலெவ்வை, பரீத் மீராலெவ்வை, டாக்டர் எம்.ஏ.எம்.ஜலால்தீன் போன்றவர்களை எண்ணிப்பாருங்கள் தொகுதி மக்களில் பெரும் எண்ணிக்கையானோர்விரும்பியவர்கள்தான் இவர்கள். புதிய மாவட்ட தேர்தல் முறையில் மக்களின் விருப்பத்திற்குரிய த்குதியானவர்களா தெரிவு செய்யப்படுகின்றார்கள்???. கட்சித்தலைமைகள் யாரை விரும்புகின்றதோ அவர்களைப் பட்டியலிட்டு மக்களிடம் வாக்களிக்குமாறு கேட்கப்படுகின்றார்கள். இதனா்ல் பட்டியலில் இருக்கும் பணம் படைத்தவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறி பாராளுமன்றம் சென்று கொண்டிருக்கிறார்கள். யாருக்கு என்ன பாதகம் இருந்தாலும் தொகுதி ரீதியாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் முறை வந்தாலே Rauf Hazeer தெரிவித்திருக்கும் பாதகமான நிலைக்கு தீர்வு ஏற்படுவதுடன் சிறந்த மக்கள் பிரதிநிதிகள் மக்களால் தெரிவு செய்யப்படும் நிலையும் உருவாகும். இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.

-   மக்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top