சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்
கோரிக்கை விஸ்பரூபமாகிறது!
பூரண முழு நாள்
ஹர்த்தாலுக்கு அழைப்பு!
முழு ஊரையும் பேரணியில் இணைத்துக்
கொள்ளவும் நடவடிக்கை!
அரசியல்வாதிகளினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்ற
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையை விரைவில் வென்றெடுக்கும் பொருட்டு,
எதிர்வரும் திங்கட்கிழமை (15/06/2015)
அரச,தனியார் நிறுவனங்கள்,பாடசாலைகள்,கடைகளை மூடி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதோடு,
அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு சாய்ந்தமருது வாழ் சகல ஆண்களையும்
அழைத்து, சாய்ந்தமருது
பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் பாரியளவிலான பேரணி ஒன்றை நடாத்துவதற்கும் தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாய்ந்தமருது வாழ் பொது மக்கள் அனைவரும் இப்பேரணியில்
கலந்து கொண்டு இரண்டு ரக்அத் சுன்னத் தொழுகை தொழுதவுடன் விஷேட (துஆ) பிரார்த்தனையுடன் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை விரைவில் வென்றெடுக்க அஹிம்சைப் போராட்டத்திற்கு அணி திரளுமாறு
சாய்ந்தமருது பொது அமைப்புக்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment