வில்பத்து தொடர்பாக
சுற்றாடல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட
அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்பிப்பு
விவாதத்திற்கு
உள்ளாகியிருக்கும் வில்பத்து சரணாலயத்தை
அண்மித்த பகுதிகளில்
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக சுற்றாடல் அமைப்பினால்
தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று முன்தினம் 5 ஆம் திகதி இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களிடம்
சமர்ப்பிக்கப்பட்டது.
இங்கு
கருத்து தெரிவித்த
ஜனாதிபதி அவர்கள்
எந்த நபருக்கும்
சுற்றாடலை சேதப்படுத்துவதற்கு
இடமளிக்க போவதில்லை
எனவும் இது
சம்பந்தமாக பல்வேறு அமைப்புகளிடம் இருந்து அறிக்கைகள்
கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜானதிபதி அவர்கள் மேற்குறிப்பிட்ட
அறிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்
அவ் அறிக்கைகள்
கிடைக்கப்பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்றம்
தொடர்பாக இறுதி
முடிவு எடுக்கப்படும்
என தெரிவித்தார்.
சங்கைக்குரிய
அதுரலிய ரதன
தேரர், மகா
சங்கத்தினர், சட்டத்தரணி ஜகத் குணவர்தன, சுற்றாடல்
உத்தியோகத்தர்கள், சுத்தமான நாளை
மற்றும் சுற்றாடல்
அமைப்புககளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள்
பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment