ஜனாதிபதி தலைமையில்
சாரணர் மற்றும் மக்கள் தொடர்பாடல் வாரம் ஆரம்பம்
இலங்கை
சாரணர் சங்கம்
ஒழுங்கு செய்துள்ள
சாரணர் சேவை
மற்றும் மக்கள்
தொடர்பாடல் வாரம் நேற்று முன்தினம் மாலை
ஜனாதிபதி அலுவலகத்தில்
சாரணர் சங்க
தலைவர் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்களின் தலைமயில்
உத்தியோக பூர்வமாக
ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி
சாரணர் சேவை
மற்றும் மக்கள்
தொடர்பாடல் வாரம் ஆரம்பிக்கப்பட்டு நாடு பூராகவும்
பல்வேறு நிகழ்வுகள்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டாக
இயங்கும் சேவைமனப்பாங்கில்
செயற்படும் விதத்தை சாரணர் இயக்கம் உலகுக்கு
எடுத்துக்காட்டி, மக்களுடன் தொடர்பாடல் முறையையும், வாழ்கையில்
ஒழுக்கமுறைமையும் ஏற்படுத்தி சீர்படுத்தும் முறைமையும் இதன்
மூலம் எடுத்துக்காட்ட
ஏதுவாகவுள்ளது.
இங்கு
கருத்து தெரிவித்த
ஜனாதிபதி அவர்கள்
தான் பொலன்னறுவை ரோயல்
கல்லூரியின் சாரணர் இயக்கத்தின் பழைய மாணவர்
என்றும் அவரது
அனுபவங்களை சாரணர் மாணவர்களுக்கு
நினைவு கூறினார்.
சாரணர்
சங்கத்தின் சார்பில் முதல் அட்டை ஜனாதிபதி
அவர்களுக்கு வழங்கப்பட்டது வேலை வாரம் திட்டத்தின்
அமைப்பாளர் ரொஹான் பெர்னாண்டோ நினைவு சின்னத்தை
ஜனாதிபதி அவர்களுக்கு
வழங்கினார்.
சாரணர்
சங்கத்
தலைமை ஆணையாளர் பேராசிரியர் நிமால் டி
சில்வா, சர்வதேச
ஆணையாளர் ஜன்பிரித்
பெர்னாண்டோ மற்றும் சாரணர் இயக்க ஆணையளர், கடந்த
வருடத்தின் சாரணர் சேவை மற்றும் மக்கள்
தொடர்பாடல் வாரம் நிகழ்வின் சிறந்த அணியாக
தெரிவு செய்யப்பட்ட
கொழும்பு சாந்த
தோமஸ் கல்லூரியின்
சாரணர் இயக்கம் மற்றும்
சாரணர் இயக்க
உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment