தொகுதிக்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்குவக்கில்லாதவர்கள்

மக்கள் பிரதிநிதியாக முன்வரக்கூடாது
கட்சிகளும் நியமிக்கக் கூடாது

தொகுதிவாரி தேர்தல் முறை எமது நாட்டில் இருந்தபோது தேசியட்சிகளில் போட்டியிட்டமுஸ்லிம்கள்  தத்தம் தொகுதிகளில் னி ஒருவராக செயல்பட்டு மக்களின் தேவைகள் அறிந்து சிறப்பாக சேவை செய்துள்ளதை இன்றும் நாம் நினைவு கூறுகின்றோம்.
ல்முனைத் தேர்தல் தொகுதியில்  ஏ.ஆர் ன்சூர்,  ம்மாந்துறையில்  எம்.ஏ.அப்துல் ஜீத், கிண்ணியா மூதூர் மஜீத்  ஹரிஸ்பதுவையில் ஏ.ஸி.எஸ்.ஹமீட் மற்றும் எம்.எம்.முஸ்தபா, நெய்னாமரைக்கார், எம்.எச்.முஹம்மத் போன்றோரை எம்மால் மறக்க முடியாது.
மாவட்ட தேர்தல் முறையின் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் எமது தொகுதி பிரதிநிதி யார்? என்று தெரியாமல் வாக்காளர்கள் திண்டாடினார்கள், தெரிவான பிரதிநிதிகளும் காலத்தை எப்படியோ ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இதனால் வாக்காளர்களின் பெறுமதியும் இல்லாமல் போய் பிரதிநிதிகளும் ஏனோதானோ என்ற நிலையில் செயல்பட்டுவந்ததையும் நாம் அனுபவரீதியாக கண்டுவந்துள்ளோம்.
தற்போது மீண்டும் தொகுதிவாரி  தேர்தல் ரும் நிலையில் எமது தொகுதிக்கு சுயமாகச் சிந்தித்து தொகுதி மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்று சேவையாற்றக்கூடிய தைரியமான ஒருவரை தெரிவு செய்யவேண்டிய நிலையில் திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்ட மக்கள் இருக்க வேண்டும்.

தொகுதி மக்களாகிய ஒவ்வொருவரும் எமது முஸ்லிம் கட்சிகள் எனக் கூறிக்கொண்டு தொகுதி மக்களின் விருப்பம் எதுவும் பெறாமல் மசூரா அடிப்படையில் எடுக்கப்பட்ட கட்சியின் முடிவு இதுதான் என்றெல்லாம் கூறிக்கொண்டு தொகுதிக்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்கு வக்கில்லாத கட்சிக்கு விசுவாசம் உள்ளவர்களை மட்டும் வேட்பாளர்களாக மக்கள் மத்தியில் எதிர்காலத்தில் முன்னிறுத்த வருவது குறித்து கிழக்கு மாகாணத்திலுள்ள தொகுதி மக்கள் நன்கு சிந்திக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top