உலகம் முழுவதும் ஒரே தரத்திலேயே நூடுல்ஸ் தயாரிப்பு
மேகி நிறுவனம் விளக்கம்

மேகி பாதுகாப்பான  உணவு என்பதில் நெஸ்லே நிறுவனம் உறுதியாக உள்ளது என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேகி நூடுல்ஸ் மீதான நுகர்வோர் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது பற்றி கவலை அடைந்துள்ளதாகவும், மேலும் அண்மையில் உருவாகியுள்ள சர்ச்சை துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளது. நுகர்வோர் சந்தேகங்களை போக்குவதே நிறுவனத்தின் முதல் குறிக்கோள் என்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
மோனோ சோடியம் குளூடாமேட் என்ற ரசாயனத்தை மேகியில் சேர்க்கவில்லை என்றும், மேகி நூடுல்ஸுல் தடைசெய்யப்பட்ட ரசாயனம் உள்ளதாக வந்த புகாருக்கு நெஸ்லே நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிகாரிகளின் ஆட்சேபத்தால் நூடுல்சை சந்தையில் இருந்து திரும்ப பெற்றுள்ளோம் என்று நெஸ்லே நிறுவன தலைமை அதிகாரி பால் பல்கே பேட்டியளித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஒரே தரத்திலேயே மேகி நூடுல்ஸ் தயாரிக்கப்படுகிறது என்று அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் நூடுல்ஸ் பாதுகாப்பானது என நிரூபணம் ஆகியுள்ளதாக பால் பால்கே தெரிவித்துள்ளார்.
மேகி நூடுல்ஸுல் காரீயமும் அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாகவே உள்ளது என்றும், இந்திய அரசு அதிகாரிகளுடன் நெஸ்லே நிறுவனம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அரசின் விசாரணைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைக்க தயார் என்று நெஸ்லே நிறுவன தலைமை அதிகாரி பால் பல்கே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நெஸ்லே நிறுவனம் தயாரிக்கு மேகி நூடில்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரசாயன பொருள் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் புதுடில்லி, உத்தர்கண்ட், காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் மேகி நூடில்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்திலும்மேகி நூடில்ஸுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை பலர் வைத்தனர். காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது ஆய்வின் போது தெரியவந்ததை தொடர்ந்து, மேகி நூடில்ஸுக்கு தடை விதித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.    விற்பனையில் உள்ள அனைத்து மேகி நூடில்ஸ் பைக்கெட்டுக்களையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top