சிறுமிகளை கட்டாயத்திருமணம் செய்து வைக்கும்
கொடுமைக்கு எதிராக தயார்
செய்துள்ள
12 வயது சிறுமியின் திருமணம் வீடியோ பதிவு
சிறுமிகளை கட்டாயத்திருமணம் செய்து வைக்கும் கொடுமைக்கு எதிராக
போராடும் ஆர்வலர்கள் 12 வயது சிறுமி ஒருவரையும் முதியவர் ஒருவரையும் இணைத்து கடற்கரை
திருமணம் ஒன்றை வீடியோ பதிவு செய்துள்ளனர்.
.லெபனான் நாட்டில் 12 வயது
சிறுமியை முதியவர்
ஒருவர் திருமணம்
செய்துகொண்ட அந்த கடற்கரை திருமணம் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு பொதுமக்களிடையே கோபத்தை
ஏற்படுத்தியுள்ளது.
லெபனான்
நாட்டின் கடற்கரை
பகுதியில் இந்த
சம்பவம் நடந்துள்ளதாக
கூறப்படுகிறது.
இச்சம்பவம்
குறித்து வெளியான
வீடியோ பதிவில்,
முதியவரான அந்த
நபருடன் 12 வயது சிறுமி திருமண கோலத்தில்
இருந்துள்ளார்.
கடற்கரை
பகுதியில் வைத்து
எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ வெளியானதும் இதுவரை
1.7 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
சுமார்
15 மில்லியன் சிறுவர்களை, அவர்களுக்கு 8 வயது நிரம்பும்
முன்னரே திருமணத்திற்கு
கட்டாயப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த
இளம்பெண்களை திருமணம் செய்துகொள்பவர்கள்
பெரும்பாலும் 60 அல்லது 70 வயது கடந்த முதியவர்கள்
என அதிர்ச்சித்
தகவலை வெளியிடுகின்றனர்.
ஐக்கிய
நாடுகள் மன்றத்தின்
ஆய்வுகளின்படி வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகெங்கிலும்
உள்ள 1.2 பில்லியன்
சிறுமிகள் கட்டாயத்திருமணத்திற்கு
தள்ளப்படலாம் என தெரிவித்துள்ளது.
சமூக
ஆர்வலர்களின் தொடர் போராட்டங்களின் காரணமாக லெபனானில்
திருமண வயதை
மாற்றியமைத்துள்ள சட்டம் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
சிறுமிகளை
கட்டாயத்திருமணம் செய்து வைக்கும் இந்த கொடுமைக்கு
எதிராக போராடும்
ஆர்வலர்கள் தயார் செய்துள்ளதுதான் அந்த கடற்கரை திருமணம் வீடியோ பதிவு எனக் கூறப்படுகின்றது.
அந்த
வீடியோவில் இடம்பெற்றுள்ள சிறுமி உள்ளிட்டவர்கள் நடிகர்களே
என அந்த
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment