தமது உறவினர்களுக்கு உதவிகளை வழங்கும் வகையிலேயே
மஹிந்தவினால் லங்காபுத்ர வங்கி ஆரம்பிக்கப்பட்டதாக
- ஆதாரகளுடன் வெளிப்படுத்தினார் ரஞ்சன் ராமநாயக்க
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ தமது
உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்காக
லங்காபுத்ர வங்கியிலிருந்து சுமார் 7 பில்லியன் ரூபாவை
வழங்கியுள்ளதாக சமூக நலன் பிரதி அமைச்சர்
ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில்
இன்று இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு
உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது
உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு
உதவிகளை வழங்கும்
வகையிலேயே முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவினால் 2006ஆம் ஆண்டு
லங்காபுத்ர வங்கி ஆரம்பிக்கப்பட்டதாகவும்
அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகவியலாளர்
சந்திப்பின் இடைநடுவில் பிரதி அமைச்சர் ரஞ்சன்
ராமநாயக்க, லங்காபுத்ர வங்கியின் தற்போதைய தலைவர்
லசந்த குணவர்தனவை
தொலைபேசி ஊடாக
தொடர்புக் கொண்டு
இந்த தகவல்களை
உறுதி செய்தார்.
லங்காபுத்ர
வங்கி 8 பில்லியன்
ரூபா நிதி
முதலீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்டதாகவும்,
அதில் 7 பில்லியன்
ரூபா மோசடி
செய்யப்பட்டுள்ளதாகவும் லங்காபுத்ர வங்கியின்
தற்போதைய தலைவர்
கூறினார்.
விஹாரையொன்றின்
காணியொன்றை குத்தகைக்கு வைத்து பணம் பெற்றுக்
கொள்ளப்பட்டுள்ளதாகவும், மாணிக்கக்கற்கள் என
கூறி போலிய
கற்களை காண்பித்து
பணம் பெற்றுக்
கொள்ளப்பட்டுள்ளதாகவும், மண்சரிவு எச்சரிக்கையுடைய
காணியொன்றை குத்தகைக்கு வைத்து பணம் பெற்றுக்
கொள்ளப்பட்டுள்ளதாகவும், மீனவர்களின் படகுகளை
திருத்தும் பணிகள் என கூறி பணம்
பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்
ரஞ்சன் ராமநாயக்க
சுட்டிக்காட்டினார்.
ரஞ்சன்
ராமநாயக்கவினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள்
அனைத்தையும் லங்காபுத்ர வங்கியின் தற்போதைய தலைவர்
தொலைபேசி ஊடாக
உறுதிப்படுத்தினார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
8ஆம் திகதி
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலப் பகுதியிலும்
இந்த வங்கியிலிருந்து
நிதி பெற்றுக்
கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த
நிதி மோசடியுடன்
நடிகர்கள், ஜோதிடர்கள், அரசியல்வாதிகள்
என பிரபல்யங்கள்
பல உள்ளதாக
சமூக நலன்
பிரதி அமைச்சர்
ரஞ்சன் ராமநாயக்க
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment