சவூதியில் இருந்து சொந்த  நாடுகளுக்கு  திரும்புபவர்களுக்கு

ஒரு முக்கிய அறிவிப்பு!
சவூதியிலிருந்து சொந்த  நாடுகளுக்கு  திரும்புபவர்கள் விமான நிலையங்களுக்கு குறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் செல்வதுஉசிதமான காரியமாகும்.
காரணம் இப்போது நீங்கள் நாடு திரும்பும் போதும் உங்கள் விரல் அடையாளத்தைக் ( Finger Print) கொடுக்கவேண்டியுள்ளது
உங்களுக்கு ஏதாவது குற்ற பின்னணி உள்ளதா அல்லது வங்கி வரவு செலவு பாக்கி கார் வாங்கி பெயர் மாற்றாமல் இருந்தாலோ உங்கள் பெயரில் கார் வாங்கி அது வேறு ஒருவர் பெயருக்கு மாற்றாமல் இருந்தாலோ நீங்கள் எக்சிட் செல்ல முடியாது இவை அனைத்தும் சரி செய்த பிறகே நீங்கள் நாடு செல்ல முடியும்
குறைந்தது 2 மணிநேரத்திற்கு முன்னதாக போர்டிங், எமிக்ரேஷன் போன்ற கவுண்டர்களின் சேவை நிறுத்தப்படுகிறது
இதைவிட முக்கியமான விஷயம்
வூதி அரேபியா போன்ற விமானங்களில் செல்பவர்களுக்கு 46 கிலோ லக்கேஜ் கொண்டு செல்லலாம் அந்த 46 கிலோவை ஒரே பெட்டியாக கட்டினால் நீங்கள் திருப்பி அனுப்ப படுவீர்கள் இல்லை என்றால் 23 கிலோவை மட்டும் கணக்கில் ஏற்றி கொண்டு மீதி உள்ள 23 கிலோவிற்கு பணம் கட்ட சொல்வார்கள் ஒரு கிலோவிற்கு 220 ரியால் அப்படி இல்லை என்றால் நீங்கள் பிரித்து கட்ட வேண்டும் நீங்கள் பிரித்து கட்ட அட்டை பெட்டி டேப் தேடி கண்டு பிடித்து கட்டுவதற்குள் இமிக்ரேசன் டைம் முடிந்து விடும் க்யு வில் 30 பேர் நின்றால் கூட ஒரு மணி நேரம் ஆகிவிடும்
46 கிலோவை பிரித்து 23 கிலோ 23 கிலோ என தனி தனியாக கட்ட வேண்டும்
எந்த நிறுவனத்தின் ஃபிளைட்டுக்கு டிக்கெட் எடுத்தாலும் டிக்கெட் எடு்க்கும் டிராவல்ஸில் உங்கள் பேக்கேஜ் எத்தனை கிலோ அணுமதி என்பதை சரியாக ஒவ்வொருமுறையும் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.
காரணம் திடீரென ஜெட் விமானம் 5 நாட்களுக்கு மட்டும் 30 Kg + 7kg என்று கழிந்த இரண்டு மாதங்களில் 3 முறை மாற்றியது.
அன்றைய நாட்களில் நமது பல சகோதரர்கள் விஷயம் தெரியாமல் 40+ மற்றும் கையில் 7+ கொண்டுபோய் திருப்பி கொண்டு வர ஆள் இல்லாமல் தவிக்க வேண்டாம்

எனவே, சவூதியிலிருந்து சொந்த  நாடுகளுக்கு  திரும்புபவர்கள் விமான நிலையங்களுக்கு குறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் செல்வது உசிதமான காரியமாகும்..

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top