யோஷிதவுக்கு வழி காட்டிய மஹிந்தவையும்

ஷிராந்தியையும் கைதுசெய்திருக்க வேண்டும்!

- தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி


சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தை மக்களின் பணத்தைக் கொண்டு ஆரம்பித்ததாக கூறும் இவர்கள் யாரிடம் பணம் பெற்றார்கள்? எவ்வளவு தொகை எடுத்தார்கள்? இது குறித்த எந்த தகவலையும் இவர்களால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது. எனவே, யோஷிதவை கைதுசெய்வதற்கு முன் அவருக்கு வழி காட்டிய மஹிந்த ராஜபக்வையும் ஷிராந்தியையுமே கைதுசெய்திருக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறு ப்பினருமான அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
அதிகாரத்ததை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தினூடாக பணமோசடி இடம்பெற்றதாக தெரிவித்து யோஷித ராஜபக் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இதுவரை அவரால் நிராகரிக்க முடியாமல் போயுள்ளது.
அத்துடன், சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் யோஷிதவுக்கும் எந்த தொடர்பும் இல்லையென தெரிவித்த இவர்கள் தற்போது மக்களின் பணத்தைக் கொண்டு அதனை ஆரம்பித்ததாக கூறுகின்றனர்.
ஆனால் மக்களின் பணத்தைக் கொண்டு ஆரம்பித்ததாக கூறும் இவர்கள் யாரிடம் பணம் பெற்றார்கள்? எவ்வளவு தொகை எடுத்தார்கள்? என்பது குறித்த எந்த தகவலையும் இவர்களால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் யோஷிதவை கைது செய்வதற்கு முன் அவருக்கு வழிகாட்டிய மஹிந்த ராஜபக்வையும் சிராந்தியையுமே கைதுசெய்திருக்க வேண்டும். இவர்களால் தங்களது பிள்ளையை இந்த விடயத்தில் சரியான முறையில் வழிநடத்த முடியாமல் போயுள்ளது.
இவ்வாறான நிலையில் சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் அரசுடைமையாக்கப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை. அது அரசுடைமையாக்கப்படவேண்டும்.
ஏனென்றால் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்ற பெரும்பாலான வருமானம் சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top