இலங்கையின்
68ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்குப் பின்
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை
39 ஆயிரத்திற்கும் அதிக எண்ணிக்கையானவர்கள்“like” செய்து
மஹிந்தவின் பக்கத்தை வீழ்த்தியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை
866200 பேர் “like” செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை “like” செய்தவர்களின் எண்ணிக்கையை பின்னுக்கு தள்ளவைத்துள்ளனர்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்குப் பின்நர் சுமார்
39 ஆயிரத்திற்கும் அதிக எண்ணிக்கையானவர்கள்“like” செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ
பேஸ்புக் பக்கத்தை“like” செய்தவர்களின் எண்ணிக்கையை இவ்வாறு பின்னுக்கு தள்ளவைத்து முன்னுக்கு
கொண்டுவந்துள்ளனர்.
இலங்கை
68ஆவது சுதந்திர
தின நிகழ்வுகளின்
போது, அரசு
ஏற்கனவே தீர்மானித்ததன்
பிரகாரம் சிங்களம்
மற்றும் தமிழ்
மொழிகளில் தேசிய
கீதம் இசைக்கப்பட்டது.
தமிழில்
தேசிய கீதம்
பாடப்பட்டமையானது யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் வாழும்
அனைத்து இன
மக்கள் மத்தியிலும்
புதிய நம்பிக்கைக்
கீற்றினை தோற்றுவித்திருக்கின்றது.
இந்நிலையில்
இதற்கு ஆரம்பம்
முதலே கடும்
எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்த கடும்போக்கு பெளத்த
அமைப்புக்கள் மற்றும் சில அரசியல் வாதிகள்
நேரடியாகவும், இணையத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக
பல நடவடிக்கைகளை
முன்னெடுத்தனர்.
இதன்
ஒரு கட்டமாக
சமூக வலைத்தளத்தில்
ஆதிக்கம் செலுத்தும்
பிரபல சமூக
வலைத்தளமான பேஸ்புக் இல் ஜனாதிபதியை வீழ்த்துவதற்கான
முயற்சிகளை பகிரங்கமாக மேற்கொண்டு வந்தனர்.
அதற்கமைய
இம்முறை 68ஆவது
சுதந்திர தின
நிகழ்வுகளின் போது தமிழில் தேசிய கீதம்
இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்
வகையில் ஜனாதிபதியின்
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலிருந்து உண்மையான சிங்களவர்களை
விலகிக்கொள்ளுமாறும் பேஸ்புக் பக்கத்தை
“Unlike” செய்யுமாறும் பிரச்சாரங்கள் முன்னேடுகப்பட்டது.
ஆனால் அவர்களின் முயற்சி வெற்றி அளிக்கவில்லை. அவர்களின் வேண்டுகோளுக்கு
மாற்றமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை சுமார் 39 ஆயிரத்திற்கும்
அதிக எண்ணிக்கையானவர்கள்“like” செய்துள்ளனர்.
குறித்த
பிரசாரங்கள் பகிரங்கமாக மேற்கொள்ள ஆரம்பிக்கப்படும் சமயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை 826,250 பேர் “like” செய்திருந்தனர்.
இந்த செய்தியை
பிரசுரிக்கும் நேரத்தில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பக்கம்
866200 “like” ஆக இருந்தது
அதேவேளை
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவின்
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை அன்று 843,508 பேர் “like” செய்திருந்தனர். அவருடைய பேஸ்புக் பக்கம் இந்த செய்தியை பிரசுரிக்கும்
நேரத்தில் 865964 “like” ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை“like” செய்திருப்பவர்களின் எண்ணிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை“like” செய்திருப்பவர்களின் எண்ணிக்கையைவிட
அதிகரித்துக் காணப்படுகின்றது.
0 comments:
Post a Comment