அலுவலக ஊழியர்களுக்கு அதிக சலுகைகள்
டென்மார்க் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.
உலகளவில்
அலுவலகங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு அதிக
சலுகைகளை வாரி
வழங்கும் சிறந்த
நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.
கிளாஸ்டோர்
(GlassDoor) என்ற ஓன்லைன் வேலைவாய்ப்பு நிறுவனம்
அமெரிக்கா மற்றும்
14 முக்கிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள அலுவலக
ஊழியர்களுக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கப்படுகிறது என்ற
ஆய்வினை அண்மையில்
மேற்கொண்டது. அதன்
முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது
இந்த
ஆய்வில் ஐரோப்பிய
நாடுகளில் ஒன்றான
டென்மார்க் முதல் இடத்தில் பிடித்திருந்தாலும், இரண்டாவது இடம் பிடித்துள்ள பிரான்ஸில்
ஊழியர்களுக்கு அரசு சலுகைகள் வாரி வழங்குவதாக
இந்த ஆய்வில்
தெரியவந்துள்ளது.
இதில்
உலக வல்லரசு
நாடுகளான அமெரிக்கா,
பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகள் கடைசி
இடங்களை பெற்றுள்ளன.
ஐரோப்பிய
நாடுகளில் ஒன்றான
பிரான்ஸ் நாடு
அலுவலகங்களில் பணிபுரியும் மற்றும் வேலை இல்லாமல்
உள்ள குடிமக்களுக்கு
எவ்வளவு சலுகைகளை
வழங்கிறது என்பதை
பாருங்கள்.
பெற்றோர்களுக்கான பொது விடுமுறை
பிரான்ஸ்
பெற்றோருக்கு ஒரு குழந்தை இருந்தால், தந்தை
மற்றும் தாய்
ஆகிய இருவருக்கும்
தனி தனியாக
மாதம் 600 யூரோவை 6 மாதங்களுக்கு அரசு வழங்கும்.
ஒரு
குழந்தைக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், இந்த
600 யூரோ தொகையை 3 வருடங்களுக்கு
அரசு வழங்கி
வரும். இந்த
காலத்தில் பெற்றோர்களுக்கு
விடுமுறை அளிக்கப்படமாட்டாது.
ஆனால்,
பிரித்தானியாவில் பெற்றோர் இருவருக்கும் 18 வாரங்கள் ஊதியம்
இல்லாத விடுமுறையும்,
அமெரிக்காவில் ஊதியம் இல்லாத 12 வாரங்கள் விடுமுறை
மட்டுமே அளிக்கப்படுகிறது.
ஊதியத்துடன் கூடிய ஆண்டு விடுமுறை
பிரான்ஸில்
பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊதியத்துடன்
கூடிய 35 நாட்கள்
விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதில் 11 நாட்கள்
அரசு விடுமுறையும்
அடங்கும்.
ஆனால்,
பிரித்தானியாவில் ஊதியத்துடன் 8 அரசு விடுமுறை சேர்த்து
28 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 6 அரசு விடுமுறை சேர்த்து
16 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
வேலையில்லாதவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்
பிரான்ஸில்
வேலையில்லாமல் இருக்கும் குடிமக்களுக்கு அரசு சராசரியாக
மாதம்
1,000 யூரோவை
2 ஆண்டுகள்
வரை வழங்குகிறது.
ஆனால்,
பிரித்தானியாவில் வேலையில்லாத குடிமக்களின் வயது அடிப்படையில்
வாரத்திற்கு 66 அல்லது 84 யூரோவை 28 வாரங்களுக்கு வழங்குகிறது.
உடல்நலக்குறைவு தொடர்பான விடுமுறை
உடல்நலம்
குறைவு காரணமாக
விடுமுறை எடுக்கும்
ஊழியர்களுக்கு 50 சதவிகித ஊதியத்துடன் பிரான்ஸ் நாடு
ஆண்டுக்கு 26 வாரங்கள்(6 மாதங்கள்) விடுமுறை அளிக்கிறது.
ஆனால்,
பிரித்தானியாவில் ஊழியர்கள் எவ்வளவு வருமானம் ஈட்டினாலும்,
அதில் வாரத்திற்கு
114 யூரோவுடன் 28 வாரங்கள் விடுமுறை அளிக்கிறது. துரதிஷ்டவசமாக,
அமெரிக்காவில் சட்டரீதியாக எந்த ஊதியமும் விடுமுறையும்
அளிப்பது கிடையாது.
பிரசவ காலத்தில் தாய், தந்தைக்கு அளிக்கும் விடுமுறை
பிரான்ஸில்
பிரசவ காலத்தில்
தாயாருக்கு முழு ஊதியத்துடன் 16 வாரங்கள் விடுமுறை
அளிக்கப்படுகிறது.
இதேபோல்
குழந்தை பிறந்தவுடன்
முழு ஊதியத்துடன்
தந்தைக்கு 3 நாட்கள் விடுமுறையும், அடுத்து நாள்
ஒன்றிற்கு முழு
ஊதியத்தில் 80 யூரோ குறைக்கப்பட்டு 11 நாட்கள் விடுமுறை
அளிக்கப்படும்.
பிரித்தானியாவில்
பிரசவத்திற்கு செல்லும் தாயாருக்கு 39 வாரங்கள் விடுமுறை
அளிக்கப்படுகிறது.
ஆனால்,
முதல் 16 வாரங்களுக்கு
90 சதவிகித ஊதியமும், எஞ்சியுள்ள வாரங்களுக்கு 181 யூரோ வீதம் ஊதியம் அளிக்கப்படுகிறது.
தந்தைக்கு 90 சதவிகித ஊதியத்துடன் 10 நாட்கள் விடுமுறை
அளிக்கப்படுகிறது.
அமெரிக்காவில்
இதுபோன்ற எந்த
விடுமுறையும், ஊதியமும் சட்டரீதியாக வழங்கபடுவதில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment