மகனுக்காக சட்டத்தரணியாக மாறிய
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோஷித
ராஜபக்ஸவுக்கு
பிணை கோருவதற்காக
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ இன்று கொழும்பு
மேல் நீதிமன்றத்துக்கு
சென்றிருந்தார்.
பிணை
கிடைக்கும் என எதிர்பார்த்து சென்ற மஹிந்தவுக்கு
ஏமாற்றமே கிடைத்தது.
பிணை மனு
விண்ணப்பத்தை எதிர்வரும் 29ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்
கொள்ள கொழும்பு
மேல் நீதிமன்றம்
தீர்மானித்தது.
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ பல வருடங்களின்
பின்னர் சட்டத்தரணி
சீருடையை அணிந்து
நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.
CSN தொலைக்காட்சியில் இடம்பெற்ற
நிதி மோசடி
தொடர்பில் சந்தேகத்தின்
பேரில் யோஷித்த
ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள்
ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ, ஒரு சட்டத்தரணி
ஆவார். அவர்
1970ம் ஆண்டு
சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
0 comments:
Post a Comment