இன்று இரவு 7 மணிக்கு  தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட்:

முதல் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் மோதல்



இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் இன்று புதன்கிழமை (24ஆம் திகதி) தொடங்குகிறது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய-வங்கதேச அணிகள் மோதுகின்றன.
 இந்த ஆசிய கோப்பை போட்டியில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
 இதுவரையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த 50 ஓவர் ஆட்டம் (ஓருநாள் ஆட்டம்) இந்த முறை கைவிடப்பட்டு, 20 ஓவர் (டி20) ஆட்டமாக நடைபெறுகிறது.
 இப்போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணியைப் பொறுத்த வரையில், முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் தோனி ஆடுவது சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. அவ்வாறு அவரால் ஆட இயலாத பட்சத்தில் அவருக்குப் பதிலாக பார்த்தீவ் படேல் களமிறங்குவார் என நம்பப்படுகின்றது.
 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு பெற்றிருந்த கோலி, இப்போட்டியின் மூலம் அணிக்குத் திரும்புகிறார்.
வங்கதேசத்தைப் பொறுத்த வரையில், முஸ்டாஃபிஸுர், டஸ்கின் அகமது, அல் அமின் ஹொûஸன் ஆகிய பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பர்.
 பேட்டிங்கில், ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், செளமியா சர்கார், மஹ்முதுல்லா ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடிக்கும் நோக்கில் களம் காணுகின்றனர்.
இந்தியா
 தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஆஷிஷ் நெஹ்ரா, அஸ்வின், ஜஸ்பிரீத் பூம்ரா, ரஹானே, ஹர்பஜன் சிங், புவனேஸ்வர் குமார், பவன் நெகி, பார்த்தீவ் படேல்.
வங்கதேசம்
 மோர்டாஸா (கேப்டன்), இம்ருல் கயெஸ், நுருல் ஹசன், செளமியா சர்கார், நாஸிர் ஹொûஸன், ஷபீர் ரஹ்மான், மஹ்முதுல்லா ரியாத், முஷ்ஃபிகர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷாகிப் அல் ஹசன், அல் அமின் ஹொûஸன், டஸ்கின் அகமது, முஷ்டாஃபிஸுர் ரஹ்மான், அபு ஹைதர், முகமது மிதுன், அராஃபத் சன்னி.

                      போட்டி அட்டவணை

பெப்ரவரி 24 இந்தியா-வங்கதேசம்
பெப்ரவரி 25 இலங்கை-ஐக்கிய அரபு அமீரகம்
பெப்ரவரி 26 வங்கதேசம்-ஐக்கிய அரபு அமீரகம்
பெப்ரவரி 27 இந்தியா-பாகிஸ்தான்
பெப்ரவரி 28 வங்கதேசம் இலங்கை
பெப்ரவரி 29 பாகிஸ்தான்-ஐக்கிய அரபு அமீரகம்
மார்ச் 1 இந்தியா-இலங்கை
மார்ச் 2 வங்கதேசம்-பாகிஸ்தான்
மார்ச் 3 இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம்
மார்ச் 4 பாகிஸ்தான்-இலங்கை
மார்ச் 6 இறுதி ஆட்டம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top