எஸ்.பி.திசாநாயக்க ஒரு அழுக்குப்பிராணியாம்!
போகுமிடமெல்லாம்
துர்நாற்றமாம்!!
பிரசன்ன ரணதுங்க ஆவேசம்!!!
எஸ்.பி.திசாநாயக்க ஒரு அழுக்குப் பிராணி என்றும் அவர்
போகுமிடமெல்லாம் துர்நாற்றம் வீசுவதாகவும் பிரசன்ன ரணதுங்க கடும் விமர்சனம்
செய்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலை குறித்து விளக்கமளிப்பதற்கான
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தனது
இல்லத்தில் இன்று நடத்தியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தொடர்ந்தும் கருத்து
வெளியிட்டபோது மேலும் தெரிவித்த்தாவது,
“எஸ்.பி.திசாநாயக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றார். அதற்கான
உரிமை, தகுதி அவருக்கு கிடையாது. இதனை நான் வன்மையாக
கண்டிக்கின்றேன். எஸ்.பி.திசாநாயக்க ஒரு அழுக்குப் பிராணி போன்றவர்.
அவர் போகுமிடமெல்லாம் துர்நாற்றம் தான் வீசும். தற்போது
அவர் நல்லாட்சி எனும் பேரில் சுதந்திரக் கட்சியை நாறடித்துக் கொண்டிருக்கின்றார்.
தற்போதைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெளிவாக இரண்டு
கூறுகளாக பிரிந்துள்ளது. ஒரு பிரிவினர் நல்லாட்சி அரசாங்கத்தின் அரவணைப்பில்
சொகுசு வாழ்க்கை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு மக்களின் ஆதரவு இல்லை.
மற்றைய பிரிவினர் பொதுமக்களுடன் இருக்கின்றனர். இவர்கள்
தான் கூட்டு எதிர்க்கட்சியினர் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
எங்களுக்குத் தான் பொதுமக்களின் ஆதரவு இருக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்
சுதந்திரக் கட்சி சார்பில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற 14 பேரில் 13 பேர்
எங்களுடன் இருக்கின்றனர். சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில்
50க்கும் மேற்பட்டோரின் ஆதரவு எங்களுக்கு உண்டு.
கட்சியின் தலைமைத்துவம் முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து
பலவந்தமாகவே பறித்தெடுக்கப்பட்டது. அது தொடர்பான ஆதாரங்களை உரிய நேரத்தில்
வெளிப்படுத்துவோம்.
சிரந்தி அம்மையார் மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோரைப்
பாதுகாப்பதற்காக மஹிந்த கட்சியின் தலைமைத்துவத்தை விட்டுக் கொடுத்ததாக
தெரிவிக்கப்படுவதெல்லாம் பொய்யான தகவல்களாகும்.
அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு
இருக்கும் செல்வாக்கை அழிக்க முயற்சிக்கின்றனர். எனினும் கட்சியின் தலைமைப் பதவி
பறித்தெடுக்கப்பட்ட போது சிரந்தி அம்மையார் மற்றும் நாமல் ஆகியோருக்கு எதிராக
எந்தவித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை” என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment