இடதுசாரி அரசியல்வாதி விஸ்வாவர்ணபால
இன்று காலை காலமானார்
இலங்கையின் முன்னணி இடதுசாரி அரசியல்வாதிகளில் ஒருவரான பேராசிரியர் விஸ்வா வர்ணபால இன்று காலை காலமானார்.
கடந்த 2004-2010ம் ஆண்டு காலப்பகுதியில் உயர்கல்வி அமைச்சராக அவர் செயற்பட்ட காலத்தில் பல்கலைக்கழகக் கல்வி மற்றும் மாணவர்களுக்கான வசதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் பலம்வாய்ந்த அமைச்சராக கடமையாற்றிய அவர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் மைத்திரி அணியுடன் இணைந்து செயற்படத் தொடங்கியிருந்தார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராகவும் ஜனாதிபதி மைத்திரியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
1936ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி பிறந்த பேராசிரியர் விஸ்வா வர்ணபால, தனது 79 வயதில் காலமாகியுள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment