தொலைக்காட்சியை
பார்த்தபடி இறந்தபோன பெண்!
சடலமாக 42 ஆண்டுகளுக்கு பின் மீட்பு!!
தொலைக்காட்சி
பெட்டியின் முன்னால் அமர்ந்தபடி இருந்த பெண்ணின்
சடலம் 42 ஆண்டுகளுக்கு
பின் மீட்கப்பட்ட
சம்பவம் ஓன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு
ஐரோப்பிய நாடுகளில்
ஒன்றான க்ரோஷியாவின்
தலைநகர் ஜாக்ரிப்பில்
அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில்
உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து தெரியவருவதாவது,
அடுக்குமாடி
குடியிருப்பில் உள்ள ஒரு வீடு பல ஆண்டுகளாக
பூட்டியப்ப கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த
வீட்டை திறந்துப்பார்க்க
மற்ற குடியிருப்புவாசிகள்
முடிவு செய்தனர்.
இதனையடுத்து
வீட்டை திறந்தபோது
தொலைக்காட்சியின் முன் அமர்ந்தபடி ஒரு பெண்ணின்
சடலத்தை பார்த்துள்ளார்.
இதனால்
அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து
பொலிஸுக்கு தகவல் அளித்துள்ளனர்.
சடலத்தை
கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைத்தனர்.
பிரேத
பரிசோதனையில்
மேற்கொண்ட விசாரணையில் இறந்துகிடந்த பெண்ணின் பெயர்
ஹெட்விக்கா கோலிக் என்பதும் கடந்த 1966 ஆம்
ஆண்டு முதல்
அவரை காணவில்லை
என்பதும் தெரியவந்தது.
அண்டைவீட்டினரும்
அப்பெண் வேறு
வீட்டுக்கு மாறி சென்று விட்டாக நினைத்துள்ளனர். அதனால் அவர் குறித்து
யாரும் தேடுதல்
நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாம்.
இந்நிலையில்
நான்கு தசாப்தங்களுக்கு பின்
அவரது உடல்
மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment