அமைச்சர் ராஜிதவுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக
அமைச்சரின் புதல்வரும், எம்.பியுமான சதுர சேனாரத்ன
ஊடகங்களுக்கு தெரிவிப்பு!
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நேற்று இருதய அடைப்பை நீக்கும் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இருதயத்துக்கு குருதியை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சுகவீனமுற்றிருந்தார்.
இதனையடுத்து சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அமைச்சர் ராஜிதவுக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமைச்சர் ராஜிதவின் சத்திரசிகிச்சை நேற்று காலை மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அமைச்சரின் மூத்த புதல்வனும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
சத்திர சிகிச்சையின் பின்னர் அமைச்சரின் உடல்நிலை விரைவில் தேறிவிடும் என்றும் இரண்டொரு வாரங்களில் அவர் நாடுதிரும்பக் கூடியதாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment