ஈரானில் பொதுத் தேர்தல்

ஈரான் நாடாளுமன்றத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அந்த நாட்டில் நடைபெறும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 290 எம்.பி.களைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்தத் தேர்தலில் வாக்களிக்க, 5.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரான் நாட்டில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வந்ததால் மாலை 6 மணியுடன் முடிவடைய வேண்டிய வாக்குப்பதிவு சுமார் ஆறுமணி நேரம் நீட்டிக்கப்பட்டு, பின்னிரவு 11.45 அளவில் முடிவடைந்தது.

290 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலுடன், சட்டமன்ற நிபுனர்களுக்கான் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்த சட்டமன்ற நிபுணர் தேர்தலில் மத குருமார்கள் மட்டுமே பங்கு பெறுவார்கள். பின்னர் அவர்கள் இணைந்து தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். அவர்சுப்ரீம் லீடர்எனப்படுவார்.

இதற்கு முன்னர் உலகநாடுகளின் பொருளாதார தடையால் சீரழிந்து இருந்த ஈரானின் பொருளாதார நிலைமை, தடைகள் விலக்கிகொள்ளப்பட்ட பிறகும் இன்னும் சீராகவில்லை. கடந்த 10 வருடங்களாக அரசியல் நிலைமை மிக மோசமான சூழ்நிலையிலே இருந்திருக்கிறது. பழமைவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே பிரச்சனைகள் உருவெடுத்து வந்துள்ளது. ஈரானின் பாராளுமன்றம் நாட்டின் முக்கிய பிரச்சனைகளை மட்டும் பேசுவதால் அண்டை நாடுகளுக்கிடையே நல்ல உறவுமுறை இருந்ததில்லை.


அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பிறகு நடைபெறும் இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஈரான் அரசின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 இந்தத் தேர்தலின் மூலம், மிதவாதியான அதிபர் ஹஸன் ரெளஹானியின் அரசுக்கு, நாடாளுமன்றத்தில் கூடுதல் பலம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 தற்போது, நாடாளுமன்றத்தில் பழமைவாதக் கட்சியினர் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதால், ரெளஹானி அரசால் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

 நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி, ஈரானின் சக்தி வாய்ந்த மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் 88 உறுப்பினர் குழுவையும் வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பர். அயதுல்லா கமேனிக்குப் பிறகு, அவரது பதவிக்கான அடுத்த தலைவரை அந்தக் குழுவே நியமிக்கும்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top