காணி அமைச்சுப் பதவி சுதந்திரக் கட்சி எம்.பி ஏக்கநாயக்கவுக்கா? ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி திலக் மாரப்பனவிற்கா?
சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.கவிற்கும் இடையில் முரண்பாடு!
மறைந்த எம்.கே.டி.எஸ்
குணவர்தன
வகித்து வந்த காணி அமைச்சு பதவியை கட்சியின் சிரேஸ்ட
உறுப்பினரான டி.பி. ஏக்கநாயக்கவுக்கு வழங்க வேண்டும் என சுதந்திரக் கட்சியினரும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுப்
பதவியை வகித்து பின்னர் இராஜினாமாச் செய்த திலக் மாரப்பனவிற்கு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர் என
அறிவிக்கப்படுகின்றது.
இதனால் காணி
அமைச்சுப் பதவியை
பெற்றுக்கொள்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில்
முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
எம்ம்.கே.டி.எஸ் குணவர்தனவின்
மறைவினால் காணி
அமைச்சு பதவி
தற்போது வெற்றிடமாகியுள்ளது. குணவர்தன வகித்து வந்த
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, பீல்ட் மார்ஷல்
சரத் பொன்சேகாவிற்கு
வழங்கப்பட்டுள்ளது.
எனினும்,
அமைச்சுப் பதவிக்கு
யாரை நியமிப்பது
என்பது குறித்து
பிரதான இரண்டு
கட்சிகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போது
காணி ராஜாங்க
அமைச்சராக கடமையாற்றி
வரும் டி.பி.ஏக்கநாயக்கவிற்கு
அந்தப் பதவி
வழங்கப்பட வேண்டுமென
சுதந்திரக் கட்சியின் பலர் கோரி வருகின்றனர். இது குறித்து ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவிடம் அவர்கள் கோரிக்கை ஒன்றையும்
முன்வைத்துள்ளனர். கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான
டி.பி.
ஏக்கநாயக்க மிகவும் பொருத்தமானவர் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,
காணி அமைச்சுப்
பதவியை சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும்
சட்டம் ஒழுங்கு
அமைச்சுப் பதவியை
வகித்து பின்னர்
இராஜினாமா செய்த
திலக் மாரப்பனவிற்கு
வழங்கப்பட வேண்டுமென
ஐக்கிய தேசியக்கட்சியின்
உறுப்பினர்கள் கோரி வருகின்றனர்.
எவ்வாறெனினும்,
இந்த காணி
அமைச்சு மற்றும்
ஏனைய சில
அமைச்சுப் பதவிகள்
குறித்து ஜனாதிபதி
நாடு திரும்பியதும்
பிரதமருடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்மானம் எடுப்பார்
என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment