மட்டக்களப்பு மாவட்டத்தில் 6729 ஆசிரியர்கள் கடமை
இவர்களில் 4232 பேர்
பெண்கள்!
மட்டக்களப்பு
மாவட்டத்தில் 6729 ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி
போதனைகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என
கல்வி அமைச்சின்
புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கின்றது.
இவர்களில் 4232 பேர் பெண்களாகவும் 2497 பேர் ஆண்களாகவும் உள்ளனர். தமிழ்
மொழி மூலமாக
6638 ஆசிரியர்களும் சிங்கள
மொழி மூலமாக 23 ஆசிரியர்களும் ஆங்கில
மொழி மூலமாக
68 ஆசிரியர்களும் இவ்வாறு
கடமை செய்து
கொண்டிருக்கிறார்கள்.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் 19 ஆசிரியர்கள்( Released to a Office) ஏனைய நடவடிக்கைகளுக்காக
காரியாலயத்திற்கு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இம்மாவட்டத்தில்
6 பேர்
M.Phil தரத்திலும் 130 பேர் MA/M.Sc/M.Ed தரத்திலும் 3044 பேர் BA/B.Sc/ B.Ed தரத்திலும்
3357 பேர் G.C.E. A/L தரத்திலும்
192 பேர் G.C.E.O/L தரத்திலும்
உள்ளனர்.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் 843 பேர்
21 – 30 வயதிலும் 2569 பேர் 31- 40 வயதிலும் 2213 பேர் 41 – 50 வயதிலும் 790 பேர்
51 – 55 வயதிலும் 186 பேர் 56
– 57 வயதிலும் 128 பேர்
58 - 60 வயதிலும் இருந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் 302 பேர் அதிபர்களாகவும் 36 பேர் பதில் அதிபர்களாகவும்
79
பேர் பிரதி அதிபர்களாகவும் 05 பேர் பதில் பிரதி
அதிபர்களாகவும் 18 பேர்
உதவி அதிபர்களாகவும்
1 பேர் பதில்
உதவி அதிபராகவும் 6288 பேர் ஆசிரியர்களாகவும் பாடசாலைகளில் கடமை
செய்கின்றனர்.
இம்மாவட்டத்திலுள்ள
மொத்த ஆசிரியர்களில் 2673 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் 3899 பேர் பயிற்றப்பட ஆசிரியர்களாகவும் 80 பேர் பயிற்சியற்ற ஆசிரியர்களாகவும் 77 பேர் பயிலுநர் ஆசிரியர்களாகவும்
இருந்து கொண்டிருக்கின்றனர்.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் 27 (1AB) பாடசாலைகளும் 54 (1C) பாடசாலைகளும் 111 (Type 2) பாடசாலைகளும்
156 (Type 3) பாடசாலைகளும் என மொத்தமாக 348 பாடசாலைகள்
உள்ளன. இதில்
10 தேசிய பாடசாலைகளும்
அடங்கும்.
இப்பாடசாலைகளில்
3 சிங்கள பாடசாலைகளாகவும்
70 முஸ்லிம் பாடசாலைகளாகவும்
275 தமிழ்
பாடசாலைகளாகவும் உள்ளன
0 comments:
Post a Comment