பெப்ரவரி 30 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி
தெரிவிப்பு!
அப்படி ஒரு திகதி நாட்காட்டியில் இல்லை.
பெப்ரவரி மாதத்திலும் 30ம் திகதி வரை இருப்பதாக தம்புள்ளை பொலிஸாரின் ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 14ம் திகதி கலேவெல பிரதேசத்தில் பாதை விதிகளை மீறிய சாரதி ஒருவரின் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட தம்புள்ளை பொலிஸார் அதற்குப் பதிலாக தண்டப் பற்றுச்சீட்டு ஒன்றை வழங்கியுள்ளனர்.
அதில் பெப்ரவரி 30ம் திகதி வரை குறித்த பற்றுச் சீட்டை தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என்றும், தண்டப் பணம் செலுத்தப்படாத பட்சத்தில் 30ம் திகதி தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல் ஊடகங்களுக்கு கசிந்த நிலையில் பொலிஸாரிடம் சிங்கள ஊடகமொன்று கேள்வியெழுப்பியுள்ளது. அதற்குப் பதிலளித்துள்ள தம்புள்ளை பொலிஸார், திகதியை கணக்கிடும்போது தவறு ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த சாரதி நேரில் வந்து தண்டப் பணத்தை செலுத்தி சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.