அவமானத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு

மாணவி தற்கொலை முயற்சி!

கிளிநொச்சியில்  பிரபல பாடசாலை ஒன்றில்  தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வீட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த சனிக்கிழமை காலையில் பாடசாலையில் மேலதிக கணித வகுப்பிற்காக  சென்றிருந்த  மாணவியை வகுப்பு நிறைவுற்றதும் ஆசிரியர் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாணவி வகுப்பிலிருந்து வெளியில் ஒடி வந்து நேராக வீடு சென்றுள்ளார்.
இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்று மாணவியின் பெற்றோர் அதிபரிடம் இது சம்மந்தமாக  முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவத்தை விசாரித்த அதிபர் தான் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தெரிவிப்பதாக கூறியதோடு தரம் 10C யில் கல்வி கற்ற மாணவியை தரம் 10A பிரிவுக்கு மாற்றியுள்ளதோடு கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு வருமாறும் அறிவித்துள்ளார்.
புதன்கிழமை பாடசாலைக்குச் சென்ற மாணவியுடன் சக மாணவிகள் எவரும் பேசாது இருந்தது மட்டுமன்றி குறித்த மாணவியே தவறு செய்துள்ளதாகவும் பேசிக்கொண்டதன் விளைவாக அவமானம் அடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இன்று வெள்ளிக்கிழமை மாணவியின் உறவினர்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடி குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்வதோடு, ஆசிரியர் கைது செய்யப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட உறவினர்களிடம் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மாணவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு  முன்னர் சம்பவம் தொடர்பில் கடிதம் எழுதி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவு, என்பவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top