ஜனாதிபதிக்கு எதிராக ஜேர்மனியில் புலிக் கொடிஏந்தி
தமிழர்கள் சிலர் ஆர்ப்பாட்டம்!
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஜேர்மன்
விஜயத்தினை எதிர்த்து ஜேர்மனியில் வாழும்
தமிழர்கள் சிலர் புலிக் கொடிகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.
ஆசியா
பசுபிக் ஜேர்மன்
வணிக சங்கமும்,
யேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து
நடாத்திய " இலங்கை - ஜேர்மன் வணிக பேரவை
மாநாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்திருந்தார்.
இந்நிலையிலேயே
அவரின் வருகையை கண்டித்தும்,
நல்லாட்சி அரசாங்கம்
என்ற பெயரில்
தொடர்ந்தும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம்
செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
பலத்த
பாதுகாப்புடன் மாநாட்டுக்கு வருகை தந்த ஜனாதிபதி
கண்டன ஆர்ப்பாட்டத்தை
கவனித்துள்ளார்.
இதேவேளை
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தனது
கைகளை அவர்களுக்கு அசைத்து காட்டியபடி சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
புலிக்கொடியை
வானுயர உயர்த்தி
அசைத்தவர்களாக அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் எனவும்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment