வங்கியாளர்களுக்கு தடை விதித்து
கோபத்தை வெளிப்படுத்தியுள்ள
சிறப்பு உணவக உரிமையாளர்!
அறுசுவை உணவகம் ஒன்றில் வங்கியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்து கரும்பலகையில் அறிவிப்பு செய்திருப்பது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அறிவிப்புச் செய்திருப்பது
எமது இலங்கை நாட்டில் அல்ல இது பிரான்ஸ் நாட்டில் ஆகும்.
அந்நாட்டின் முக்கிய பகுதியில் அறுசுவை உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் 30 வயதான Alexandre
Callet, என்பவர். இவர் தமது தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்துடன் அந்நாட்டில் செயல்பட்டு வரும் வங்கிகளில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அந்த நாட்டில் செயல்பட்டு வரும் முக்கிய வங்கிகள் அனைத்தும் இவரது கடன் கோரிக்கையான 70,000 யூரோ பணத்தை வழங்க மறுத்துள்ளது.
தமது உணவகத்தில் ஆண்டு வருவாய் மட்டும் 300,000 யூரோ என தெரிவித்துள்ள அவர், தாம் விண்ணப்பித்துள்ள தொகை மிக குறைவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பல நாள் பல முறை வங்கி தோறும் ஏறி இறங்கிய அவரை நாயை விட மோசமாக நடந்து கொண்டனர் என தெரிவித்துள்ள Callet, ஒரு முடிவுக்கு வந்தவராய், தமது உணவகத்தில் இனி எந்த வங்கியாளர்களையும் அனுமதிப்பதில்லை என முடிவுக்கு வந்துள்ளார்.
Callet வாழ்க்கையில் வங்கிகளால் புறக்கணிக்கப்படுவது இது முதல் முறையல்ல, தனது 23 வது வயதில் தற்போதைய உணவகம் திறக்கவிருந்தபோதும், இதே நிலையை சந்தித்துள்ளதாக கூறும் அவர், அப்போது தாம் 20 வங்கிகளில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமது கடையின் வாசலில் ஒரு கரும்பலகையில், வங்கியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை எழுதி வைத்து தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.