25 ஆண்டுக்கு பின் பரோலில்
வெளியே வந்த நளினி!
முதல்வர் எங்களை விடுவிப்பார் என நம்புகிறோம்
நளினி தெரிவிப்பு!!
ராஜீவ்
கொலை வழக்கில்
25 ஆண்டு காலமாக
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்
எங்களை தமிழக
முதல்வர் ஜெயலலிதா
விடுவிப்பார் என்று நம்புகிறோம் என நளினி
கூறியுள்ளார்.
தந்தையின்
இறுதிச் சடங்கில்
பங்கேற்க பரோலில்
வெளியே வந்த
நளினி இவ்வாறு
கூறினார்.
ராஜீவ்
காந்தி கொலை
வழக்கில் குற்றவாளியான
நளினி, தனது
தந்தை சங்கரநாராயணனின்
இறுதிச் சடங்கில்
கலந்து கொள்வதற்காக
வேலூர் சிறையிலிருந்து
இன்று பரோலில்
வெளியே வந்தார்.
ஓய்வு
பெற்ற காவல்
துறை ஆய்வாளரான
சங்கரநாராயணன் திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவானபுரத்தில்
வசித்து வந்தார்.
உடல் நலக்
குறைவால் சங்கரநாரயணன்
நேற்று காலமானார்.இதையடுத்து அவரது
உடல் சென்னை
கொண்டுவரப்பட்டு, இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
தந்தையின்
இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவதற்காக, தன்னை பரோலில்
செல்ல அனுமதிக்க
வேண்டும் என்று
நளினி சிறைத்துறையிடம்
மனு அளித்தார்.
இதையடுத்து, இன்று காலை 8 மணியிலிருந்து இரவு
8 மணி வரை
12 மணி நேரம்
நளினிக்கு பரோல்
வழங்ப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.