கல்முனை அஸ்ரஃப் ஞாபகார்த்த
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்
டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களுக்கு இடமாற்றம்!
கல்முனை
அஸ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்
புதிய வைத்திய
அத்தியட்சகராக (Medical Superintendent) டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான் அவர்கள்
நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்
தனது கடமைகளை
எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.
இதேவேளை, கல்முனை
அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக
இதுவரை கடமையாற்றிய
டாக்டர்
ஏ.எல்.எம்.நசீர் அவர்கள் கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு
இடமாற்றம்செய்யப்பட்டிருக்கிறார்
டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் அவர்கள் மேற்படி வைத்தியசாலையை பொறுப்பேற்ற
பின் பௌதீக
வளங்களில் பாரிய
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சகலரும் ஏற்றுத்தானாக வேண்டும்.
புதிதாக
பல கட்டிடங்கள்
கட்டப்பட்டுக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
அவை பூரணமாகவுள்ள
நிலையில் அவருக்கு
இடமாற்றம் நடந்துள்ளமை
கவலைக்குரியதாக இருந்த போதும் அவரது சேவையை
மக்கள் எப்போதும் மறந்துவிட முடியாது.
பல
குறைபாடுகளுடன் இருந்த அஷ்ரஃப் வைத்தியசாலையை பொறுப்பேற்று தன்னால்
முடிந்த வரை
முன்னேற்ற பாடுபட்டமைக்காக
எமது பாராட்டுக்களை டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.