விமல் வீரவன்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி
நீதிமன்றத்தில்
முன்னிலையாகுமாறு அழைப்பாணை!
நாடாளுமன்ற
உறுப்பினர் விமல் வீரவன்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு
நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. கொழும்பு பிரதம
நீதவான் கிஹான்
பிலப்பிட்டிய இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி
குறித்த அனைவரையும்
எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொது
மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தியுள்ளதாக
தெரிவித்து கறுவாத்தோட்டம்
பொலிஸார் பதிவு
செய்துள்ள முறைப்பாட்டிற்கு
அமைய நீதி
மன்றம் இந்த
உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
நான்கு
நாள் உத்தியோகபூர்வ
விஜயமாக ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையாளர்
செயித் ராத் அல்
ஹுஸைன்
கடந்த 6ஆம்
திகதி இலங்கைக்கு
வருகை தந்திருந்தார்.
அவரின்
வருகைக்கு எதிர்ப்பு
தெரிவித்து விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர்
கொழும்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த
ஆர்ப்பாட்டத்தின் போது அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகவும் அதன் ஊடாக பொதுமக்களை
அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வீதிச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கக்கூடிய குற்றமிழைக்கப்பட்டுள்ளதாகவும்
சந்தேக நபர்கள்
மீது குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜயந்த சமரவீர, வீரகுமார
திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, மொஹமட் முஸம்மில்,
ரொஜர் செனவிரத்ன,
டொன் லிசுயா
உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment