பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் உயிருடன் எரித்து கொலை
பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் உயிருடன் எரித்து கொலை செய்தவரை
பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்தவர் Muqaddas Bibi,முஹதாஸ் பீபீ (23). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாரிஸ் அலி என்பவருக்கும் திருமண நிச்சயதார்ததம் நடந்தது. அதன் பின்னர் அவர் சவூதி அரேபியாவுக்கு திடீரென புறப்பட்டு சென்று விட்டார்.
எனவே அவருடன் நடந்த நிச்சயதார்த்தத்தை முறித்து விட்டு அவரது தம்பி வாகஸ் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் முஹதாஸ் பீபீ கர்ப்பிணியாக இருந்தார். இதற்கிடையே ஒருவருடம் கழித்து சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய வாரிஸ் அலிக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டின் அறையில் தனியாக இருந்த முஹதாஸ் பீபீ மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்ததுடன் கதவை மூடி தீயிட்டு ஓடி விட்டார். இதனால் தீயில் கருகி முஹதாஸ் பீபீ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து வாரிஸ் அலியை கைது செய்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment