உகண்டாவில் மஹிந்தவிற்கு
ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம்!
சிங்கள ஊடகம் தெரிவிப்பு

அண்மையில் உகண்டா ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று, அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வித்தியாசமான அனுபவம் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
உகாண்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் அறை வரைக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து சென்ற VIP வாகனத்தில் அவருடன் லொஹான் ரத்வத்தேயும் பயணித்துள்ளார்.
வேகமாக பயணித்த அந்த வாகனத்திற்கு முன்னால் எதிர்பாராத விதமாக பாதை மாறிய ஒருவர் மோதுண்டுள்ளார்.
சம்பவத்தை பார்த்த மஹிந்தவுக்கு வியர்வை கொட்டிய நிலையில், உரத்த குரலில் சிங்களத்தில் டேய் ஒரு மனிதன் அடிப்பட்டு விட்டான்.... வாகனத்தை நிறுத்துடா.... என கூச்சலிட்டுள்ளார்.
எனினும் வாகனத்தின் சாரதி மற்றும் பாதுகாப்பாளர்கள் எதுவும் நடைபெறாததனை போன்று சாதாரண முறையிலேயே பயணிதுத்துள்ளனர்.
இதன் போது உடனடியாக வாகனத்தை நிறுத்தி விட்டு மோதுண்ட நபர் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவும்...” என லொஹான் ரத்வத்தே ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார்.
VIP வாகனத்தில் யாராவது மோதுண்டால் இந்த நாட்டில் அதனை யாரும் கண்டுக்கொள்வதில்லை என சாரதி மற்றும் பாதுகாப்பாளர்கள் சிரித்த முகத்துடன் தெரிவித்துள்ளனர். VIP களுக்கு எதிராக இந்த நாட்டில் நடவடிக்கை எடுத்த முடியாதென தெரிவித்துள்ளனர்.
அவ்வாறாக கூறி 2 நிமிடங்களுக்குள் மேலும் ஒருவர் இந்த வாகனத்தில் மோதுண்டுள்ளார். அதற்கு எதுவும் கூறாத மஹிந்த மற்றும் லொஹான் ஒருவருக்கு ஒருவர் தங்கள் முகங்களை பார்த்துக் கொண்டுள்ளனர்.
பின்னர் ஹோட்டல் அறையில் இறங்கிய மஹிந்தவிடம் என்ன தான் இருந்தாலும் இது சிறப்பான நாடு சேர்...” என லொஹான் கூறியுள்ளார். அதற்கு மஹிந்த எவ்வித பதிலும் கூறவில்லை.
உகாண்டாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் நாள் அன்று மஹிந்தவின் அருகில் வந்த லொஹான் ரத்வத்தே,

சேர்.. தற்போது உங்களுக்கு இராணுவ பாதுகாப்பும் இல்லை என்பதனால் நான் இந்த 10 பாதுகாப்பாளர்களிடம் கதைத்து தங்களின் பாதுகாப்பிற்காக இலங்கைக்கு செல்லுமாறு கூறினேன். அவர்களும் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். சேர் என்ன கூறுகின்றீர்கள்?....” என அவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்காமல் மௌனம் காத்தார் என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top