50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான வாகனம்!
                                                     
நானுஓயாவில் இன்று 20 ஆம் திகதி  சனிக்கிழமை காலை 10.30க்கு, டிப்பர் ரக வாகனமொன்றை, வீதியோரத்தில் நிறுத்தி வைக்க முற்பட்ட வேளையில் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து 50 அடிப் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பென்டர் வாகனத்தில் டிப்பர் ரக வாகனம் மோதியதில் டிப்பென்டர் வாகனமும் சேதமாகியுள்ளது. டிப்பர் ரக வாகனத்தின் சாரதி படுகாயங்களுக்குள்ளாகி, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக நானுஓயாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top