வங்கி தொழில் கற்கைளுக்கான நிலையத்தில்
வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையில் தமிழ் கொலை!
இராஜகிரியவில் அமைந்துள்ள வங்கி தொழில் கற்கைளுக்கான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை ஒன்றில் தமிழ் பிழையாக எழுதப்பட்டுள்ளது.
குறித்த விளம்பர பலகையில் “கடன் ஆலோசனை நிலையம்” என்பதற்கு பதிலாக “கடன் ஆலொசனை நிலையம்” என தவறுதலாக எழுதப்பட்டுள்ளது.
பிரதான பாதையின் அருகில் காணப்படும் இந்த விளம்பர பலகையினை நாளாந்தம் பார்வையிடும் மக்கள், மத்திய வங்கி பிழை விட்டுள்ளது என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டு செல்கின்றனர்.
இதனை திருத்த வேண்டியது சம்பந்தபட்ட அதிகாரிகளின் கடமையாகும் எனவே உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.


0 comments:
Post a Comment