நியூயார்க்
வீதியில் பட்டப் பகலில்
பள்ளிவாசல் இமாம் சுட்டுக் கொலை!
அமெரிக்காவின்
நியூயார்க் வீதியில் பள்ளிவாசல் இமாம் மற்றும்
அவரது உதவியாளர்
(Maulama Akonjee, 55, and Thara Uddin, 64) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்
நகரில் உள்ள
ஓசோன் பூங்கா
அருகேயுள்ள மசூதி ஒன்றில் இருந்து (உள்ளூர்
நேரப்படி) நேற்று
பிற்பகல் சுமார்
1.30 மணியளவில் அராபியர்கள் அணியும் பாரம்பரிய உடையுடன்
வந்து கொண்டிருந்த மெளலானா அகோன்ஜீ (55)
மற்றும் அவரது
உதவியாளரான தாரா உத்தீன்(64) ஆகியோரை வழிமறித்த
துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள், மிக நெருக்கமாக
நின்று இருவரையும்
தலையில் சுட்டுள்ளனர்.
இந்த
தாக்குதலில் படுகாயமடைந்த மெளலானாஅகோன்ஜீ, தாரா
உத்தீன் அருகாமையில்
உள்ள ஜமாய்க்கன்
ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை
பலனின்றி இருவரும்
உயிரிழந்தனர்.
நியூயார்க்
நகரின் பிரசித்தி
பெற்ற முஸ்லிம்
மதத் தலைவரான மெளலானா அகோன்ஜீ
மற்றும் அவரது
உதவியாளர் சுட்டுக்
கொல்லப்பட்ட இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள
அமெரிக்க-இஸ்லாமிய
நல்லுறவு கவுன்சில்,
மேற்படி கொலை
சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நியூயார்க் நகர பொலிஸார் உடனடியாக கைது செய்ய
வேண்டும் என
வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.












0 comments:
Post a Comment