ஊடகங்கள் அடிக்கடி சுட்டிக்காட்டியதை அடுத்து
சாய்ந்தமருதில் கொத்தணி
முறையில் கழிவுகள் அகற்றல்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் முடியாததை
ஆணையாளர் தனி ஒருவராக செயல்பட்டு செய்து காட்டினாரா?
ஊடகங்கள் அடிக்கடி சுட்டிக்காட்டியதை அடுத்து
சாய்ந்தமருதில் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் நேற்று 13 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
கல்முனை மாநகரசபை கலைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறானதொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது பலர் சேர்ந்து
நடாத்திய சபையைக் கொண்டு கச்சிதமாக செய்ய முடியாத
இவ்வேலைத்திட்டத்தை கல்முனை மாநகர சபை ஆணையாளர் தனி ஒருவராக செயல்பட்டு இவ்வாறும் மக்களுக்கான சேவைகளைச் செய்து கொடுக்க முடியும் எனச் செய்துகாட்டி சாதித்துள்ளாரே! மக்கள் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் அசமத்தனமாகவா சபையில் இருந்து கொண்டிருந்தார்கள்
என்ற வினாவை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விருப்பம் இறுதியாக கடந்த 2016.07.30 ஆம் திகதி பதிவேற்றிய
படங்களுடனான செய்தி “கல்முனை மாநகர சபையின் குப்பைத் தொட்டியாக சாய்ந்தமருது”
http://makkalviruppam.blogspot.com/2016/07/blog-post_709.html
கல்முனை மாநகர சபையின்
குப்பைத் தொட்டியாக சாய்ந்தமருது
கல்முனை மாநகர சபையின் குப்பைத் தொட்டிகளில் ஒன்றாகசாய்ந்தமருதிலுள்ள சில இடங்கள் காட்சியளிக்கின்றன
கல்முனை மாநகர சபை தனது
அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கழிவுகளை சீராக அகற்றுவதில் இன்றுவரை சீரான
நடவடிக்கையை மேற்கொண்டு வெற்றிகொள்ளவில்லை என்பதன் காரணமாகவே இந்த அவலநிலை என
மக்கள் தெரிவிக்கின்றனர் .
கல்முனை
மாநகர சபைக்கு அருகாமையில் உள்ள காரைதீவு பிரதேச சபை அதன் அதிகாரத்திற்குட்பட்ட
பகுதிகளில் கழிவுகளை அகற்றுவதில் கொண்டிருக்கும் சீரான நடவடிக்கை கல்முனை மாநகர
சபையிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது
லீடர் அஷ்ரஃப் வித்தியாலயத்திற்கு அருகிலும் பழைய ஆஸ்பத்திரி வீதியிலும் கழிவுகள்
வீசப்பட்டு எவ்வாறு வீதியில்சிதறிக்கிடக்கின்றன, கட்டாக்காலி நாய்கள், ஆடுகள்,
மாடுகள் அவைகளை எப்படி கிளறிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காணமுடியும்.
சாய்ந்தமருது
லீடர் அஷ்ரஃப் வித்தியாலயத்தில் சின்னஞ் சிறுவர்களே கல்வி கற்று வருகின்றனர்.
இப்பாடசாலைக்கு அருகில் கழிவுகள் கொட்டப்படுவதாலும் அவைகள் நாளாந்தம்
அகற்றப்படாததாலும் துர்நாற்றம் ஏற்படுவதுடன் நோய்களைப் பரப்பும் கொசுக்களும்
உருவாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சிறுவர்களிடம் நோய்கள் எளிதில்
தொற்றுவதற்கான துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதாக கவலை வெளியிடப்படுகின்றது.







0 comments:
Post a Comment