ஊடக கூட்டிணைவு நிகழ்ச்சித்திட்டத்துக்காக
ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது
கே.எல்.ரி.யுதாஜித்
வறுமை ஆராய்ச்சி நிலையம், இலங்கையின் வறுமை சார் வித்தியாசமான விடயங்களை ஆராயும் நோக்குடன், அச்சு, வானலை (தொலைக்காட்சி/ வானொலி) மற்றும் இணையத்தள ஊடக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற அனைத்து ஊடகவியலாளர்களிடடமிருந்தும், ஒரு ஊடக கூட்டிணைவு நிகழ்ச்சித் திட்டத்துக்காக விண்ணப்பங்களைக் கோருகின்றது.
இக்கூட்டிணைவு நிகழ்ச்சிக்கு போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து (15) ஊடகவியலாளர்களுக்கு வறுமையினது பல்வேறு பரிமாணங்கள் மீதான சிறந்த புரிந்துணர்வினை வழங்கி மற்றும் வெளிப்படுத்தப்படாத அல்லது மிகவும் குறைவாக அறிக்கைப்படுத்தப்படுகின்ற வறுமை தொடர்பான விடயங்களில் வழிகாட்டல்களை வழங்குவதனூடாக அவர்களது திறன்களை விருத்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிபெற்ற பங்கேற்பாளர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அபிவிருத்தி ஆய்வாளர்களுடன் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பினைப் பெறுவதுடன், அவர்களது களப் பயணச் செலவினங்களுக்காக பண உதவியையும் பெற்றுக் கொள்வர். அவர்கள் தமக்கு விருப்பமான ஒரு விடயத்தினை ஆழ, அகலமாக ஆராய்வதற்குரிய வாய்ப்பினைப் பெறுகின்றனர் என்பதுடன், இவ்வாய்ப்பு தாம் ஆராயும் விடயம் தமது உரிய ஊடகத்தினூடாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனும் புரிந்துணர்வின் அடிப்படையிலானதாகும்.
விண்ணப்பங்கள் செய்தி நிருபர்கள், தனிச்சிறப்புக் கருத்துக்கள் எழுதுவோர், ஒலி-ஒளி அலைபரப்புத் தயாரிப்பாளர்கள் மற்றும்இணையத்தளம் உள்ளடக்க படைப்பாளர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படும். பங்கேற்பாளர்களைத் தெரிவுசெய்கையில் நிகழ்ச்சித் திட்டத்தில் ஒரு சிறந்த பால் சமநிலை பேணப்படும் என்பதுடன், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையும்.
விண்ணப்பாதாரிகள் முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியில்இயங்குபவர்களாகவோ குறைந்தது ஐந்து (5) வருட ஊடகச் சேவை அனுபவத்தினை கொண்டுள்ள ஊடகவியலாளராக அல்லது புகைப்பட ஊடகவியலாளராக இருத்தல் வேண்டும்.
அனைத்து விண்ணப்பதாரிகளும் இந்நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து பெறப்படும் தமது கண்டாய்வினை பிரசுரிப்பதற்கு அல்லது ஒலி-ஒளி அலைபரப்புவதற்கு உடன்படுவதாக தாம் இணைந்து பணியாற்றுகின்ற ஊடக நிறுவனத்தின் பதிப்பாசிரியர் அல்லது தொகுப்பாளரிடமிருந்து கடிதமொன்றினை வழங்குதல் வேண்டும்.
பங்கேற்பாளர்கள் அச்சு,
வானலை மற்றும் இணையத்தள ஊடகங்களில் சிறந்த அனுபவம் கொண்ட ஐந்து ஊடக நிபுணர்களைக் கொண்ட குழாமொன்றினால் தெரிவுசெய்யப்படுவதுடன், இவர்களால் இந்நிகழ்ச்சித்திட்டம் முழுதும் வழிகாட்டப்பட்டு பயிற்றப்படுவர்.
விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதி : 26 ஓகஸ்ட் 2016 ஆகும் மேலதிக தகவல்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கும்
http://www.cepa.lk/events/details/media-fellowship-programme-to-probe-many-facets-of-poverty-c442cb354d6bbbb7a0083034b31a3f13.html
எனும் இணைப்பினைப் பயன்படுத்தலாம்.
0 comments:
Post a Comment